"ஆத்தி, 61 வயசு வரை இது தெரியாம போச்சே.." பிறப்பு சான்றிதழில் முதியவர் பார்த்த விஷயம்.. "மனுஷன் ஒரு நிமிஷம் அப்படியே வாயடைச்சு போய்ட்டாரு.."
முகப்பு > செய்திகள் > உலகம்61 வயதாகும் நபர் ஒருவர், தனது பிறப்பு சான்றிதழை பார்த்த பிறகு, அதிலிருந்து ஒரு விஷயத்தை பார்த்துவிட்டு, ஒரு நிமிடம் அப்படியே வாயடைத்து போய் விட்டார்.

61 வயதாகும் Alan Grainger என்ற நபர் ஒருவர், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உண்மை என்று நம்பி வந்த ஒரு விஷயம், தற்போது இல்லை என்று ஆகி உள்ளது. ஆனாலும், அதை ஏற்க மறுத்து ஆடம் பிடிக்கிறார் Alan.
தன்னுடைய பிறப்புச் சான்றிதழை, எதேச்சையாக சமீபத்தில் Alan பார்த்துள்ளார். அப்படி அவர் எடுத்து பார்த்த நிலையில், தன்னுடைய பெயர் தொடர்பான உண்மை தற்போது தான் அவருக்கு தெரிய வந்துள்ளது.
'Alan' என்ற பெயரில், இரண்டு 'L'களை இதுவரை அவர் பயன்படுத்தி வந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் பார்த்த போது தான், அதில் ஒரே ஒரு 'L' மட்டும் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்ததும் ஆலனின் குடும்பத்தினர் அடக்க முடியாமல் சிரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இவர் தனது திருமண சான்றிதழ், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலுமே, இரண்டு 'L' கொண்டு, Allan என்ற பெயரை தான் அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இவை அனைத்தையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தனது உடலில் இரண்டு இடங்களில் 'Allan' என்று தான் அவரும் பச்சைக் குத்தி உள்ளார். ஆனால், தனது பிறப்பு சான்றிதழில் தான், தவறுதலாக பெயரின் ஸ்பெல்லிங் இடம்பெற்றுள்ளது என்றும் அதனை ஏற்க மறுக்கிறார் ஆலன்.
இது தொடர்பாக பேசும் அவர், "என்னால் இதனை நம்பவே முடியவில்லை. இது பிறப்பு சான்றிதழில் நடந்த தவறு என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் எனது பெற்றோர்கள் அப்படி எதையும் குறிப்பிட்டதாக எனக்கு நினைவில் இல்லை. என்னுடைய பெயரில், உடலின் இரண்டு இடங்களில் நான் பச்சை குத்தவும் செய்துள்ளேன். நான் நிச்சயம் இதனை மாற்றப் போவது கிடையாது. அதே போல, இதில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாகவும் நான் பார்க்கவில்லை" என ஆலன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், அவருடைய கேப்ஷனில், "தனது வாழ்நாள் முழுவதும் தன்னுடைய பெயரை தவறாக உச்சரித்து வந்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் 61 ஆண்டுகளாக தனது பெயரின் ஸ்பெல்லிங்கை தவறாக குறிப்பிட்டு வந்தது தொடர்பான தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
Also Read | பாம்புக் கடி மூலம் உயிரிழந்த அண்ணன்.. இறுதிச் சடங்கிற்கு வந்த சகோதரனுக்கும் காத்திருந்த துயரம்

மற்ற செய்திகள்
