"நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரகூடாது.." 10 வருஷமா துடைப்பம் வித்த காசு.. 100 வயசு'லயும் சபாஷ் போட வைத்த முதியவர்
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவைச் சேர்ந்த 100 வயதான முதியவர் ஒருவர், தான் பத்து ஆண்டுகளாக சேமித்த பணத்தை வைத்து செய்த சம்பவம் ஒன்று, பலரையும் நெகிழ செய்துள்ளது.
Also Read | "3 வருசமா Students யாரும் வரல.. சம்பளம் மட்டும் எதுக்கு??.." ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்!
சீனாவைச் சேர்ந்த ஜின் ஜுஷூன் என்ற 100 வயது முதியவர், கடந்த பத்து ஆண்டுகளாக துடைப்பம் விற்று பணத்தை சேமித்து வந்துள்ளார்.
அப்படி கடந்த 10 ஆண்டுகளில், ஜின் ஜூஷூன் மொத்தம் 50,000 யுவான்களை சேமித்து வைத்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 5.90 லட்சம் ரூபாய் வரை ஆகும்.
10 வருஷமா சேர்த்த காசு
இந்நிலையில், வயதான காலத்திலும் தான் சேமித்த பணத்தை தன்னுடைய பயனுக்கோ அல்லது குடும்பத்தினரின் பயனுக்கோ எடுக்க எண்ணாத அந்த முதியவர், 5 மாணவர்களின் கல்வி தொகைக்காக அந்த பணத்தினை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். அடிப்படை படிப்பு செலவைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு உதவ அந்த முதியவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இந்த பணத்தை சேமிப்பதற்காக சுமார் 5000 துடைப்பங்கள் வரை கடந்த 10 ஆண்டுகளில் ஜின் ஜூஷூன் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய சிறு வயதில் வறுமை காரணமாக தன்னால் படிக்க முடியாமல் போனதாகவும், இதன் காரணமாக தற்போது கல்வி கற்க நினைக்கும் மாணவர்களுக்கு உதவ முன் வந்ததாகவும் ஜின் தெரிவித்துள்ளார்.
சபாஷ் போட வைத்த 100 வயது முதியவர்
தன்னுடைய 100 ஆவது வயதில், ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை சமூகத்துக்கு செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த செயலை அவர் செய்ததாகவும் சீன ஊடகங்களுக்கு ஜின் ஜூஷூன் பேட்டி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜின் அளிக்கவுள்ள நிதி உதவி சென்று சேரவுள்ள ஐந்து மாணவர்களும், சமீபத்தில் அங்குள்ள தேசிய கல்லூரி நடத்திய நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
100 வயதிலும் அயராது உழைத்து, அந்த பணம் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு போய் சேர வேண்டும் என முடிவு எடுத்த முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.