நடக்க இடம் இல்லைன்னா என்ன..? நாங்க தாவுவோம்ல.. ட்ரெயின் கம்பார்ட்மெண்டுக்குள் இளைஞர் செஞ்ச சேட்டை.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஓடும் ரயிலில் தனது சீட்டிற்கு செல்ல, இளைஞர் ஒருவர் அங்கிருந்த கம்பிகளை பிடித்தபடி தொங்கிக்கொண்டே பயணிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரயில் பயணம்
பொதுவாகவே ரயில் பயணங்கள் சுவாரஸ்யமானவை. ஏராளமான மக்கள் தினந்தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியா போன்று மக்கள் தொகை அடர்ந்த நாடுகளில் பொதுவாகவே பொதுப் போக்குவரத்து என்பது சிரமமான காரியம் தான். குறித்த நேரத்திற்குள் ரயிலை பிடிப்பது சிரமம். காரணம் ரயில்வே நிலையங்களில் நிரம்பி வழியும் கூட்டம். அதில் தப்பித்து, நமக்கான ரயிலை கண்டுபிடித்து ஏறுவது கடினமான காரியம் தான். அதுவும் தீபாவளி போன்ற பண்டிகை தினங்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.
நெரிசல்
அதைவிட சிரமம், நமது இருக்கையை தேடி கண்டுபிடிப்பது. இது ஒருபுறம் என்றால் ரயில் கம்பார்ட்மெண்ட் உள்ளே பயணிகள் செய்யும் விநோதங்களை சமாளிப்பது நம்முடைய பொறுமையை சோதித்துவிடும். அப்படி, தற்போது வைரலாக பரவிவரும் வீடியோவில் ரயில் ஒன்றின் நடைபாதையில் பயணிகள் படுத்திருக்கிறார்கள். அவர்களை தாண்டிச் செல்வது சிரமம் என நினைத்த ஒரு இளைஞர், ரயிலின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பிகளை பிடித்து தொங்கியபடி, அடுத்தடுத்த கம்பிகளுக்கு தாவுகிறார்.
ஸ்பைடர் மேன்
தனது இருக்கைக்கு செல்ல, கம்பிகள் வழியே ஸ்பைடர் மேன் போல பயணிக்கும் இந்த இளைஞரது செயலை கண்டு சக பயணிகள் திகைத்துப் போகின்றனர். இந்த வீடியோவை கௌரங் பரத்வா (Gaurang Bhardwa) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில்,"இந்தியாவில் ஸ்பைடர்மேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியவராத நிலையில், இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகிவிட்டது.
நெட்டிசன்கள் இந்த பதிவில்,"நான் எப்போதும் இதே சிக்கலை ரயில்களில் எதிர்கொள்கிறேன்" என்றும் "ஸ்பைடர்மேன் ரயில்வே ஹோம்" (Spiderman - Rail-Way home) என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுவரையில் இந்த வீடியோ 39,000 முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை 2,500 பேர் லைக் செய்திருக்கின்றனர்.
स्पाइडरमैन भारत में। pic.twitter.com/5QNjJ8OzfP
— Professor ngl राजा बाबू 🥳🌈 (@GaurangBhardwa1) October 13, 2022
Also Read | வேலையில சின்னது பெருசுன்னு எதுவும் இல்ல.. இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பி.டெக் மாணவியின் டீ கடை ..

மற்ற செய்திகள்
