"உங்க GPAY நம்பர் தாங்க SIR".. எலான் மஸ்க் TWEET-ல் தமிழ் நடிகர் போட்ட VIRAL கமெண்ட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அவருடைய பதிவில் சிபிராஜ் போட்ட கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வகையில் ட்விட்டரில் verified badge எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு பயனர்கள் பணம் செலுத்தவேண்டும் என தகவல்கள் வெளியானது. இது இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார் மஸ்க். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், verified badge-க்கு மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த verified badge வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிபிராஜ் எலான் மஸ்கின் verified badge குறித்த பதிவை டேக் செய்து,"உங்களுடைய கூகுள் பே எண்ணை தயவு செய்து எனக்கு அனுப்பவும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022