தன்னைவிட 6 வயசு மூத்த பெண்ணை கல்யாணம் செய்ய துடித்த வாலிபர்.. உண்மை தெரிந்து பெற்றோர் போட்ட திட்டம்.. திருப்பூரில் திக்..திக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் பெற்றோர் மற்றும் சகோதரரை தாக்கியதாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read | பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி.. கோவத்துல கணவர் செய்த பதறவைக்கும் காரியம்..!
திருமணம்
திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி முத்துலெட்சுமி. இந்த தம்பதிக்கு மாரிமுத்து மற்றும் சந்தோஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மாரிமுத்துவிற்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. அந்தப் பெண்ணிற்கு மாரிமுத்துவை விட 6 வயது அதிகம் எனவும் கூறப்படுகிறது. மாரிமுத்துவும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர். அப்போது, மாரிமுத்துவின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை கந்தசாமி மற்றும் தாயார் முத்துலெட்சுமி ஆகியோர் பெண்ணின் வயதை காரணம் காட்டி, திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.
வீட்டுக்கு வந்த மகன்
இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த மாரிமுத்துவை கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் அவரது பெற்றோர். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு வந்திருக்கிறார் மாரிமுத்து. இதனால் குழப்பமடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி கேட்க வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைலகப்பாக மாறியதாக தெரிகிறது. அப்போது மாரிமுத்து தனது தந்தை கந்தசாமி, தாய் முத்துலெட்சுமி மற்றும் இளைய சகோதரர் சந்தோஷ் ஆகியோரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரிமுத்துவை கைது செய்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கந்தசாமி, முத்துலெட்சுமி மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பெரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | "இந்த 4 இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க".. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கை..!