IND VS NED : விறுவிறுப்பான போட்டிக்கு நடுவே காதல் PROPOSE.. "அவங்க ஓகே சொன்னாங்களா இல்லையா?".. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.
மொத்தமுள்ள 12 அணிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தீவிரமாக ஆடி வருகின்றனர்.
உலக கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் கருதப்பட்டு வருகிறது. குரூப் 2 வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா மோதி இருந்தது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 53 ரன்களும், கோலி 62 ரன்களும், சூர்யகுமார் 51 ரன்களும் எடுத்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதமடித்திருந்த விராட் கோலி, தொடர்ச்சியாக இரண்டாவது அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி பேட்டிங் செய்த கொண்டிருந்தது. இந்த நிலையில், விறுவிறுப்பான போட்டிக்கு இடையே மைதானத்தில் இருந்த நபர் ஒருவர், தனது காதலிக்கு Propose செய்த சம்பவம், இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவில், நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது.
அந்த சமயத்தில் மைதானத்தில் இருந்த நபர் ஒருவர், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தி மோதிரத்தை நீட்டுகிறார். அதனைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரது காதலையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார். உடனே அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைக்க, இது தொடர்பான வீடியோக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 56 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
During match....Proposal from Indian boy.......Love for Cricket..Love for Partner pic.twitter.com/0wZ5oBV3y7
— Ashutosh Yadav (@Ashutosh8429) October 27, 2022
Also Read | "ரிஷி சுனக் Kidnap.. நெஹ்ராவ அனுப்பிடலாம்".. பிரபல தொழிலதிபரின் நண்பர் போட்ட 'ஜாலி' பிளான்??..😀