மூன்று மாடி வீட்டின் மேற்கூரையில்.. "பெட்சீட் வெச்சு போர்த்தி".. ஈரக் கொலையை நடுங்க வைத்த பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்மூன்று மாடி வீடு ஒன்றின் கூரை மீது போர்வையில் மறைத்து வைக்கப்பட்ட படி மர்மமாக ஒன்று கிடந்த நிலையில், அதனை எடுத்து பார்த்த போது கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

Also Read | கிருஷ்ணகிரியில் தல தோனி திறந்து வைத்த கிரிக்கெட் மைதானம்.. ஆகா.. இதுக்குத்தானா..?
இங்கிலாந்தின் மறுக்க யார்க்ஷையர் பகுதியை அடுத்த லீட்ஸ் என்னும் இடத்தில் மூன்று மாடி வீடு ஒன்று அமைந்துள்ளது.
இந்த வீட்டின் மேற்கூரையில் போர்வையில் சுற்றி வைக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய பொருள் ஏதோ கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பான தகவல் அப்பகுதி முழுவதும் வேகமாக பரவ, மக்கள் மத்தியில் கடும் பீதியும் பதற்றமும் உருவானது. இதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெரிய ஏணிகள் உதவியுடன் தீயணைப்புத் துறையை சேர்ந்த வீரர்கள் சிலர், அந்த வீட்டின் மாடியில் ஏறி உள்ளனர்.
இதன் பின்னர் தான், மனிதனின் உடல் ஒன்று அங்கே கிடப்பது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தொடர்ந்து போர்வையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த அந்த உடலையும் கீழே இறக்கி உள்ளனர்.
இதன் பின்னர் அதே மூன்று மாடி வீட்டை சேர்ந்த Gerald Colgan என்ற நபரின் உடல் தான் அது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, Gerard Colgan காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, போலீசாரும் அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தற்போது மூன்று மாடி வீட்டிற்குள் போர்வைக்குள் சுற்றிய நிலையில், உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
32 வயதாகும் Gerard திடீரென காணாமல் போன நிலையில், எப்படி அவர் வீட்டின் மேற்கூரையில் இறந்து கிடந்தார் என்பதும் அவருக்கு என்ன நடந்திருக்கும் என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்த திருடன்.. "திருட போன எடத்துல இவ்ளோ ஞாபக மறதியா?".. சுவாரஸ்யம்!!

மற்ற செய்திகள்
