'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 28, 2020 03:35 PM

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக மிக தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

we are not happy, US doing serious investigation, trump faults China

கொரோனா வைரஸ் தொற்றானது அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 56 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘கொரோனா விவகாரத்தில் சீனா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வருகின்றது. இதனால் அந்த நாட்டின் மீது பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன.

மேலும் அங்கு என்ன தான் நடந்தது என அறிந்து கொள்ள நாங்கள் தீவிரமான விசாரணைகளை நடத்தி வருகிறோம். கொரோனா விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கைகளால், நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. கொரோனா பரவலுக்கு சீன அரசு தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டால், உலக நாடுகள் சந்தித்து வரும் பேரிழப்புக்கு சீனா பொறுப்பேற்பதுடன் அதற்கு ஈடாக பெரும் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

சீனா மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் ஜெர்மனி கோரியதை விட மாபெரும் தொகையை இழப்பீடாக கோர உள்ளதாகவும்’ அவர் கூறினார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ‘சீனா நினைத்திருந்தால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் முன்னரே தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. மாறாக, கொரோனா நோய் தொற்றுடன் சீனர்கள் விமானம் ஏறி, உலகின் பல நாடுகளுக்கு பயம் மேற்கொண்டுள்ளனர்.

உலக நாடுகளில், தேவை அதிகரித்தப் பிறகு, அதிக விலைக்கு பாதுகாப்பு உடைகளை சீனா உற்பனை செய்துள்ளது. இதுதவிர, தரக்குவைறான நோய்க் கண்டறியும், மருந்து கருவிகளை ஏற்றுமதி செய்து, அதிக லாபம் ஈட்டியுள்ளது. இந்த தொற்று நோயிலிருந்து கூட சீனா லாபம் பார்ப்பதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் இவற்றினை எதையும் செவிசாய்க்காத வகையில் சீனா சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.