'இந்த பெண் தான் காரணமா?'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. யார் இவர்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 28, 2020 03:52 PM

அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையின் பெண் வீரர் ஒருவரே சீனா உகானில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகிறது.

life threat to us official for covid19 after china reports

சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி உள்ளது. இதனால் கொத்து, கொத்தாக மக்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று பல ஆய்வாளர்கள் உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையின் பெண் வீரர் ஒருவரே சீனா உகானில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மாட்ஜே பெனாஸி என்ற அமெரிக்க ராணுவ ரிசர்வ் படை வீரர் முதன் முறையாக மனந்திறந்துள்ளார்.

சீனாவின் சமூக வலைப்பக்கங்களில் தமது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு, தாம் உலகின் முதல் கொரோனா நோயாளி எனவும் பரப்பப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா அறிகுறிகளோ, அல்லது கொரோனா சோதனைகளில் இதுவரை தமக்கு பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அரசு திட்டமிட்டே, கடந்த அக்டோபரில் கொரோனாவை உகானில் பரப்பியதாகவும், அப்போது உகானில் நடத்தப்பட்ட ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னரே, கொரோனா பரவியதாகவும் சீனாவில் தகவல் பரப்பப்படுகிறது.

மார்ச் தொடக்கத்தில் இதுபோன்ற தகவல் பரவியதும், தமக்கும் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக பெனாஸி தெரிவித்துள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்திலேயே, இது திட்டமிடப்பட்ட உயிரியல் ஆயுதம் எனவும், அமெரிக்காவுக்கு இதில் கட்டாயம் பங்கிருக்கும் எனவும் தகவல் பரப்பப்பட்டது.

தற்போது அமெரிக்க ராணுவ ரிசர்வ் படை ஊழியர் மீது கவனம் திருப்பப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உகானில் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட பெனாஸி, கடைசி கட்டத்தில் விபத்துக்குள்ளாகி போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது.

அந்த விபத்தில் அவருக்கு விலா எலும்பு உடைந்து கொஞ்சம் ஆபத்தான நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். பெனாஸி மீது சீனா உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் கவனம் செலுத்த காரணமே ஒரு அமெரிக்கர் எனவும், 59 வயதான அந்த நபர், தமது யூடியூப் பக்கத்தில், கொரோனா வைரஸ் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டது எனவும், சீனாவை கட்டுக்குள் கொண்டுவர, பெனாஸி மூலம் உகானில் பரப்பப்பட்டது எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னரே பெனாஸிக்கு கொலை மிரட்டலும் , அவதூறு கடிதங்களும் குவியத்தொடங்கின.

PC: Asianet news