'அடுத்த' வாரம் உங்களுக்கு இருக்கு... அவங்க கூட 'கூட்டணியோ'?... 'உலக சுகாதார அமைப்புக்கு' எதிராக... கொந்தளிக்கும் 'டிரம்ப்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | May 15, 2020 08:55 PM

உலக சுகாதார அமைப்பின் மீது நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump going to take action against WHO soon for Corona

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் மூலம் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது. பொருளாதாரத்திலும் கடும் நெருக்கடியை அமெரிக்கா சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

சீனா வேண்டுமென்றே தான் வைரசை பரப்பியது என்றும், இதற்கு அவர்களுக்கு தக்க பதிலடி காத்திருக்கிறது எனவும் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அதே போல கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு ஏன் முன்னரே அறிவிக்கவில்லை என கூறி டிரம்ப் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப், 'உலக சுகாதார அமைப்பின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகபட்சமாக அடுத்த வாரம் அறிவிக்கப்படும்' என தெரிவித்தார். முன்னதாக சுமார் 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி செய்தது. ஆனால் சீனாவோ 38 மில்லியன் டாலர் வரை தான் உதவி செய்தது. ஆனாலும் சீனாவிற்கு தான் உலக சுகாதார அமைப்பு சாதகமாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. அந்த அமைப்பு முறையாக செயல்பட்டிருந்தால் தற்போது உலகளவில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுத்திருக்க முடியும் என டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #TRUMP #WHO