"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா!?".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அமெரிக்கா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் விலை மலிவான ஹைட்ராக்ஸி குளோரோகுவீனை நம்பி உள்ள நிலையில் தற்போது சீனா மூலம் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பார்க்கும் முன்னர் இந்திய மருந்து ஏற்றுமதியின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். 1970களில் இந்திரா காந்தி, இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது இந்திய மருந்து தயாரிப்புக்கான காப்புரிமை பெறப்பட்டது. விலை மலிவான மருந்து மாத்திரைகள் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடாக அன்றிலிருந்து வலம் வந்தது. விலை மலிவான மருந்துகளில் முக்கியமானது ஹைட்ராக்ஸி குளோரோகுவீன். மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக அமையும் இது, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதற்கான மூலக்கூறுகளில் 68 சதவீதம் சீனாவில் இருந்து பெறப்படுகிறது. தற்போது அமெரிக்கா, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுவீனை பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க மோடி அரசு இந்த மருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைச்சகம் (எஃப்.டி.ஏ) ஹைட்ராக்ஸி குளோரோகுவீனை கொரோனாவை போக்கும் மருந்தாக அங்கீகரிக்கவில்லை என்றபோதிலும் இந்த மருந்து அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சீன- அமெரிக்க மோதலால் புதிய பிரச்னை கிளம்பி உள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குவீனை ஏற்றுமதி செய்ய சீன மூலப்பொருட்கள் கிடைப்பதில் சீன அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதன்காரணமாக கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குவீனை சாப்பிட்டு வரும் அமெரிக்கர்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது ட்ரம்ப் அரசை ஆத்திரம் அடையச் செய்துள்ளது.
