"அதான் எனக்கு காய்ச்சல் இல்லையே..." "சளியும் இல்லை..." 'குணமடைந்தாலும் சரி...' 'அவசியம் இதை கடைப்பிடிக்க வேண்டும்...' 'புதிய ஆய்வில்' வெளியான 'பகீர் தகவல்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 30, 2020 03:21 PM

கொரோனா பாதித்தவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் அனைத்தும் நீங்கிய பிறகும் வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், குணமடைந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என புதிய ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது.

Can the virus spread through coronal healers?-new study

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன ராணுவ மருத்துவமனையில் ஜனவரி 28ஆம் தேதி முதல் ஃபிப்ரவரி 19ஆம் தேதி வரை சிகிச்சை பெற்ற 19 பேரை சீன மற்றும அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முதல் 5 நாட்களுக்கு கடுமையான காய்ச்சல், தொண்டடை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவற்றால் சிரமப்பட்டனர். 8 நாட்களுக்குப் பிறகு அவர்கள் படிப்படியாக குணமடைந்தனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட 2 சோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கிவிட்டதாக முடிவு வந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டன.

அனால் அறிகுறிகள் முற்றிலும் நீங்கிய பிறகும் அவர்கள் அடுத்த 8 நாட்களுக்கு வைரசை பரப்பக்கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வு முடிவின்படி, கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கி குணமடைந்த பின்னரும் வைரஸ் முற்றாக நீங்குவதற்கு கால அவகாசம் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவு இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட வேண்டியது மிக அவசியம் என்பதால், பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை தீவிரப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags : #CORONA #VIRUS #SPREAD #CORONAL HEALER #NEWS STUDY