‘கொஞ்சம் காய்ச்சல், ஜலதோஷமா இருந்துச்சு’... ‘நானும், மனைவியும் டெஸ்ட் பண்ணி பார்த்தோம்’... ‘தனிமைப்படுத்தப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்’... 'வருத்தத்தில் ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 12, 2020 08:47 AM

ஃபாரஸ்ட் கம்ப், கேஸ்ட் அவே, சல்லி, கேப்டன் ஃபிலிப்ஸ் போன்ற பல படங்களில் நடித்து, கோல்டன் குளோப், ஆஸ்கர் எனப்படும் அகாடெமிக் அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனக்கும், தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Tom Hanks and his wife, Rita Wilson, had tested positive

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘வணக்கம் நண்பர்களே... ரீட்டாவும் நானும் ஆஸ்திரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். ஜலதோஷமும் உடல் வலியும் இருக்கிறது. ரீட்டாவிற்கு உடல் கொஞ்சம் சில்னஸாக இருந்தது. கொஞ்சம் காய்ச்சலும் இருகிறது. இதனால் இருவரும் கொரோனா வைரஸுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டோம். இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?.. மருத்துவ நிபுணர்கள் சில வழிமுறைகளைச் சொல்கிறார்கள். அதைப் பின்பற்ற வேண்டியதுதான். நாங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவோம். மீண்டும் பரிசோதனைகள் செய்யப்படும். பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காகத் தனிமைப்படுத்தப்படுகிறோம். அடுத்தடுத்த தகவல்களை உங்களுக்குத் தெரிவிப்போம். உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

கோல்டன் குளோப் விருதுகள் 2020 -இல், வாழ்நாள் முழுக்க சினிமாவுக்காக அர்ப்பணித்த கலைஞருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதான செஸில் பி டிமில்லே விருது, இந்த முறை `தி டாவின்சி கோடு', `ஃபாரஸ்ட் கம்ப்' உள்ளிட்ட படங்களில் நடித்த, டாம் ஹாங்க்ஸுக்கு வழங்கப்பட்டது. இவர் நடித்து இந்த வருடம் பல படங்கள் வெளியாக காத்துள்ள நிலையில், தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACTOR #OSCARS #HOLLYWOOD #TOM HANKS #RITA WILSON