ஆஸ்கர் 2020...! சிறந்த திரைப்படமாக 'பாரசைட்'.. 'ஜோக்கராக நடித்த 'வாக்குவின் ஃபீனிக்ஸ்' சிறந்த நடிகராக விருது பெறுகிறார்...' முழு விபரங்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 10, 2020 10:58 AM

ஹாலிவுட்டில் வெளியான திரைப்படங்களையும், கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது.

ஆஸ்கர் விருதுகள் 2020: சிறந்த திரைப்படமாக பாராசைட் தேர்வு

92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், காலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது. இதில் ஜோக்கர், ஐரிஷ்மேன், 1917, ஒன்ஸ் அபாண்ட் எ டைம் இன் ஹாலிவுட் ஆகிய திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இம்முறை சிறந்த அயல்மொழித் திரைப்படம் என்ற விருதுப் பிரிவு, சிறந்த சர்வதேச திரைப்படம் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்தப் பிரிவில் விருதை வென்ற ’பாராசைட்’ இயக்குநர் பாங் ஜூன் ஹோ பேசுகையில் இந்தப் பெயர் மாற்றம் முடிவுக்கு அகாடமி தரப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுகளின் பட்டியல் :

சிறந்த நடிகர்: வாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை: ரெனே செல்வேகர் (ஜூடி)

சிறந்த திரைப்படம்: பாரசைட்

சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த ஆவணப் படம்: ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜாக்குலின் டுரன் (வுமன்)

சிறந்த திரைக்கதை: பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த இயக்குநர்:  பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த சர்வதேசத் திரைப்படம்: பாரசைட்

சிறந்த தழுவப்பட்ட திரைப்படம்: தைக்கா வைத்தி (ஜோ ஜோ ராபிட்)

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை: 1917

சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலித்தொகுப்பு: ஃபோர்ட் Vs ஃபெராரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: டாய் ஸ்டோரி 4

சிறந்த ஆவணப்படம்: பாரக் மிட்செல் ஒபாமா தம்பதி தயாரித்த அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த பின்னணிப் பாடல்: சர் எல்டன் ஜான், பெர்னி தாபின் (ராக்கெட் மேன்)

சிறந்த பின்னணி இசை: ஹில்டுர் (ஜோக்கர்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: காஸ் ஹிரோ, ஆனி மோர்கன் விவியன் பேக்கர் (பாம் ஷெல்)

சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ்: கிாயம் ரோச்சன், கிரேக் பட்லர், டாமினிக் டூயி (1917)

 

Tags : #OSCARS #OSCAR2020