"சின்ன விஷயம் தான்..." "ஆனால் பெரிய ரிலாக்ஸ்..." பிரபல 'ஹாலிவுட்' நடிகர் வெளியிட்ட 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 14, 2020 11:39 PM

'டெட் பூல்' (dead pool) சீரிஸ் படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ், உடைந்து போன ஜிப்பை சரி செய்வது தொடர்பாக சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Hollywood actor who released a super video on fixing a broken zip

பல சமயங்களில் அவசர அவசரமாக ஜெர்க்கினை அணியும் போது ஜிப் சிக்கிக் கொள்ளும். பொறுமையில்லாமல் நாம் அதை வற்புறுத்தி அழுத்தும் போது அது கையோடு வந்து விடும். அந்த நிமிடத்தில் நாம் அடையும் வெறுப்புக்கு அளவே இருக்காது. அது போன்ற சமயங்களில் எப்படி ஜிப்பை சரி செய்வது என்பது குறித்த வீடியோவைத் தான் தற்போது ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.

வீடியோ லிங்க்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த அவர், 'இந்த ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 14 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ, உடைந்த ஜிப் ஸ்லைடரை எளிதாக மாட்டும் முறையை நமக்கு கற்றுத் தருகிறது. போர்க் கரண்டியின் நடுவில் ஸ்லைடரை மாட்டிக் கொண்டு துணியின் இரு முனைகளையும் ஸ்லைடருடன் பொருத்தும்போது பிரச்னை எளிதாக சரி செய்யப்படுகிறது.

 

ரையனின் இந்த ட்வீட் 1.26 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது. இந்த ஐடியாவை ஷேர் செய்தமைக்காக ட்விட்டர் பயனர்கள் ரையனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : #RYAN REYNOLDS #HOLLYWOOD #VIDEO LINK #ZIP SLIDER #TWITTER VIDEO