இந்த 'படங்களை' எல்லாம் தயவுசெஞ்சு 'டவுன்லோடு' பண்ணிராதீங்க... 'எச்சரிக்கை' விடுத்த KASPERSKY... 'அதிர' வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Feb 10, 2020 05:24 PM

ஒரு திரைப்படத்தை பார்க்க ஏராளமான வழிகள் இருந்தாலும், திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்ப்பதையே பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். இதன் காரணமாக புதிய படங்கள் திரைக்கு வந்த சிலமணி நேரங்களிலேயே ஆன்லைனுக்கு வந்து விடுகிறது.

Joker is the most dangerous movie of the year: Reports

இந்த நிலையில் காஸ்பர்ஸ்கி( Kaspersky) நிறுவனத்தின் பாதுகாப்பு எச்சரிக்கையாளர்கள் குறிப்பிட்ட சில படங்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் பாதுகாப்பில் முன்னணி நிறுவனமான காஸ்பர்ஸ்கி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மிகவும் ஆபத்தான படத்தை பட்டியலிட்டு இருக்கிறது.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, காஸ்பர்ஸ்கி ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் 925 மால்வேர் பைல்களை கண்டறிந்துள்ளனர். அவற்றில் 304 மால்வேர் கோப்புகளுடன் முன்னணியில் இருப்பது ஜோக்கர் திரைப்படமாகும். இதையடுத்து பெனடிக்ட் கம்பெர்பாட்ச் (Benedict Cumberbatch) நடித்த 1917 திரைப்படம் 215 மால்வேர்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தை ஐரிஷ்மேன் திரைப்படம் 179 மால்வேர்களுடன் பிடித்திருக்கிறது.

எனவே இந்த திரைப்படங்களை டவுன்லோடு செய்யும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களது சாதனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல ஒரு படத்தை டவுன்லோடு செய்யும்போது .avi, .mkv அல்லது .mp4 போன்ற எக்ஸ்டென்க்ஷன்களின் (extension) மீது கவனம் செலுத்தவும், அதாவது பதிவிறக்கம் செய்யவும். அதேபோல .Exe போன்ற எக்ஸ்டென்க்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

மேலும் நீங்கள் பார்வையிடும் வலைதளத்தில் எழுத்துப்பிழைகள் எதுவும் இருக்கிறதா? என்பதை சரிபார்க்க மறக்க வேண்டாம். அது உண்மையான வலைதளம் என்பதை உறுதிப்படுத்தி கொள்வதற்கு மறக்க வேண்டாம். 

 

Tags : #OSCARS