என்னையே ஜெயிப்பியா நீ?.. எதிராளியின் காதருகே சென்று... ஒலிம்பிக் போட்டியில்... குத்துச்சண்டை வீரர் செய்த பகீர் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹெவி வெயிட் குத்துச்சண்டை பிரிவில், இளம் வீரர் ஒருவர் தன்னை எதிர்த்து விளையாடிய வீரரின் காதைக் கடிக்க முயன்ற சம்பவம் பாக்சிங் ரிங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பாக்ஸிங் (குத்துச்சண்டை) பிரிவில், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த Youness Baalla என்ற வீரரும், நியூசிலாந்தைச் சேர்ந்த David Nyika என்ற வீரரும் மோதிக் கொண்டனர்.
இந்நிலையில், எதிரணி வீரர் David Nyika ஆட்டத்தின் முதல் இரண்டு சுற்றுகளில் லீட் செய்த காரணத்தால், ஆவேசமடைந்த யூனஸ், டேவிடை பற்றிக் கொண்டு காதை கடிக்க முயன்றுள்ளார். எனினும், அந்த முயற்சியில் தோல்வியடைந்தார். அதுமட்டுமின்றி, இந்த ஆட்டத்திலும் அவர் 0 - 5 என வீழ்ச்சியடைந்தார்.
அவரது இந்த செயல் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் செயலைப் போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 1997ம் ஆண்டு நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில், மைக் டைசன் தன்னை எதிர்த்து விளையாடிய ஹோலிபீல்டின் காதைக் கடித்தது குறிப்பிடத்தகக்கது.
இதுகுறித்து பேசிய டேவிட், "என் காதை கடிக்க முயன்றார். எனினும், எனது உடலில் வியர்வை இருந்த காரணத்தினாலும், அவர் மவூத் கார்ட் அணிந்திருந்த காரணத்தினாலும் அதை செய்ய முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் அதிலிருந்து தப்பினேன். ஒரு முறை நெஞ்சு பகுதியில் நான் கடி வாங்கியுள்ளேன். ஆனால், இது ஒலிம்பிக். இங்கே நமது ஆட்டம் ரொம்ப முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இரண்டு முறை காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
