'ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு... தங்கம் வெல்ல வாய்ப்பு'!.. கடைசி நேரத்தில் நடந்த குளறுபடி!.. பரபரப்பு பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டித் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார். இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தற்போது தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹூய் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையை உருவாக்கி தங்கம் வென்றார். அதையடுத்து, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட உள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மற்ற செய்திகள்
