'டிஸ்யூம்... டிஸ்யூம்...' 'கைகளில் கிளவுஸை மாட்டிக்கொண்டு..' வைரலாகும் அமைச்சர் ஜெயக்குமாரின் புதிய வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாக்சிங் செய்து அனைவரையும் அசத்தினார்.

தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் ஜெயக்குமார், கைகளில் குத்துச்சண்டைக்கான கிளவ்ஸ்களை கட்டிக் கொண்டு பாக்சிங்கில் ஈடுபட்டார்.
ஒரு நிஜமான குத்துச்சண்டை வீரர் போல் சண்டையிட்டது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
குத்துச்சண்டை போட்டியில் அமைச்சர் #ஜெயக்குமார் வெற்றி | Minister #Jayakumar #ADMK #boxing pic.twitter.com/P47uyA490N
— Malaimurasu TV (@MalaimurasuTv) February 2, 2020
Tags : #BOXING
