கடைசி நேரத்துல ஒலிம்பிக் 'கேன்சல்' ஆக சான்ஸ் இருக்கா...? ஒலிம்பிக் போட்டித் தலைவர் அளித்துள்ள பதில்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் பரவலால் ஒலிம்பிக் போட்டி தடைப்பட வாய்ப்பிருப்பதாக ஒலிம்பிக் போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோ கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு விளையாட்டு துறையில் பல நாடுகள் தங்கள் தொடர்களை பாதியில் கைவிட்டும் உள்ளனர்.
உலகம் முழுதும் பிரபலமான ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி தொடங்குகின்றன. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்களும், வீராங்கனைகளும் ஜப்பான் வந்துள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன.
டோக்கியோவில் நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 33 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், உலகம் முழுவதுமிலிருந்து 11,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியில் மொத்தம் 339 பதக்கங்கள் வழங்கப்படும்.
வரும் 23-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு முன் தொற்றுக்கு ஆளானவர்களை சேர்த்து மொத்தம் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோவ் 'வரும் 23-ஆம் தேதி ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கவுள்ள நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாங்கள் தொற்று எண்ணிக்கையை உற்று கவனித்து வருகிறோம்.
எண்ணிக்கை அதிகரித்தால் அது குறித்து ஆலோசனை நடத்தி, என்ன செய்யலாம் என்பது பற்றி நாங்கள் விவாதிப்போம். கடைசி நேரத்தில் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது' எனவும் போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
