சிகிச்சைக்கு காசு தரமுடியவில்லை.. லண்டனில் ஆஸ்பத்திரியில் இருந்து பாதியில் வெளியேறிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பை கிளப்பியவர் டிக் டாக் மாடல் ஹரீம் ஷா. பின்பு பொதுவழியில் இவருக்கு பலரும் தொல்லை தந்த வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையாகின. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (FIA) தனது வங்கி கணக்குகளை முடக்கியதால், ஒரு பக்க உதட்டை சரி செய்யக் கூடிய லிப் ஃபில்லர் சிகிச்சையை தொடர முடியவில்லை என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
ஹரீம் ஷாவின் மேல் உதட்டின் இடது பக்கம் வீங்கி இருக்கிறது. உதட்டின் ஒரு பக்கத்தை சரி செய்ய அவர் பாகிஸ்தானில் இருந்து லண்டனுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியதாவது, "நான் இப்போது இங்கிலாந்தில் இருக்கிறேன். இன்று நான் என் உதட்டை சரிசெய்வதற்காக மருத்துவரிடம் சென்றேன். எனக்கு அழைப்பு வந்தபோது மருத்துவர் என் உதட்டின் ஒரு பக்கத்தில் ஃபில்லரைச் செருகினார். சிகிச்சையில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால், சிகிச்சைக்கு ஏற்ற பணத்தை மருத்துவருக்கு கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. காரணம் FIA எனது வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டதை அறிந்தேன். இந்த சிகிச்சை விலை உயர்ந்தது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தி விட்டு வெளியேறினேன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
வங்கி கணக்கை முடக்க காரணம் என்ன?
சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 12ம் தேதி லண்டன் வந்திருந்த ஹரீம் ஷா, 'பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு கணிசமான அளவு பணத்துடன்
பயணம் செய்ததாகக் கூறி ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவேற்றிருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக FIA பணமோசடி விசாரணையைத் தொடங்கியது. பின்னர் ஹரீம் ஷா, 'இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய தொகையை எடுத்து செல்வது இதுவே முதல் முறை. பாகிஸ்தான் ரூபாயை யூரோவாகவோ அல்லது டாலராகவோ மாற்றும் போது மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று பாகிஸ்தான் அரசையும் விமர்சித்து பேசியிருந்தார். பாகிஸ்தான் சட்டங்கள் ஏழைகளுக்கு மட்டுமே பொருந்தும். லண்டனுக்கு மிகமிக எளிதாக வந்துவிட்டேன்' என்று கூறினார்.
பாகிஸ்தானின் ஃபெடரல் போர்டு ஆஃப் ரெவ்னியூ இணையதளத்தின்படி, ஒரு பயணி எந்த வெளிநாட்டு நாணயத்தையும் பாகிஸ்தானுக்கு கொண்டு வர முடியும் ஆனால் 'வெளிநாட்டு நாணயங்களை நிபந்தனையின்றி $10,000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
‘காதலனுக்காக அப்படி பண்ணிட்டேன்’.. போலீஸில் சிக்கிய இளம்பெண்.. வெளியான ‘ஷாக்’ தகவல்..!