“கன்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ் வர்றது போல் வருது”!.. சொல்லும்போதே வெடித்து அழும் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் ஊழியர் !!.. உலகையே கலங்க வைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவ பிரேத பரிசோதனை செய்யக்கூடிய இடத்தில் பணிபுரியும் மருத்துவ பெண் ஊழியர் கண்ணீர் விட்டு அழுது பேசும் வீடியோ ஒன்று டெய்லி மெயில் மூலம் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில் கண்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ்கள் வருவதுபோல, அடுத்தடுத்து தொடர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் வருவதாகவும், அவற்றை பிரேத பரிசோதனைக்கு எப்படி தயார் செய்வது என பேசியும் மருத்துவ பெண் ஊழியர் ஒருவர் உணர்வுபூர்வமாக அழுது கலங்கியுள்ளார்.
லண்டனில் உள்ள ராயல் லண்டன் மருத்துவமனையில் anatomical pathology எனும் பொறுப்பில் இருப்பவர்தான் Hannah Leahy எனும் அந்த பெண்மணி. பிரேத பரிசோதனைக்காக சடலங்களை தயார் செய்து மருத்துவருக்கு உதவுவது தான் அவருடைய பிரதான பணி.
கொரோனாவால் உயிரிழக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் 5 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர் தான் Hannah Leahy. அந்த குழுவில் உள்ளவர்களுள் அதிகமானோர் பெண்கள் தான்.
இந்நிலையில் தான் ‘இதை எப்படி உணர்கிறீர்கள்?’ என Hannah Leahy-வின் அனுபவங்களை பத்திரிகையாளார் ஒருவர் கேட்டுள்ளார். கேட்டதுமே பீறிட்டு வெடித்து அழத்தொடங்கினார் Hannah Leahy. சூட்கேஸ்களுடன் மனிதர்களை ஒப்பிட மனமில்லை.
ஆனாலும், அப்படித்தான் இறந்துபோனவர்களின் சடலங்கள் கன்வெயர் பெல்ட்டில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பல ஆண்டுகள் இந்த வேலையைச் செய்யும் Hannah Leahy உணர்வு ரீதியாக இத்தனை துயரங்களை பார்த்து அழுகிறார்.
அவர் அழுவதை பார்த்து அவரது சக பணியாளர்களும் அழுகின்றனர். இதுகுறித்த வீடியோ டெய்லி மெயிலில் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
