“வீடாயா இது?”.. 'வீட்டுக்குள் இருந்து வந்த எரிவாயு கசிவு'.. வீட்டை உடைத்துச் சென்ற போலீஸார் கண்ட ‘உறைய வைக்கும்’ காட்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனில் வீடு ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த போலீசாருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

லண்டனில் Hampstead என்கிற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து பயங்கரமாக எரிவாயு கசியும் வாசனை வரத்தொடங்கியதை அடுத்து சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், எரிவாயு கசிவு வாசனை வந்த வீட்டை நோக்கிச் செல்ல, வீட்டின் உட்புறமாக பூட்டிவிட்டு பின்புற வழியாக வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
எனினும் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அந்த அதிர்ச்சி காட்சியை கண்டுள்ளனர். அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் புற ஊதாக் கதிர்களில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் இருந்துள்ளன. சொல்லப் போனால் ஒரு கஞ்சா தொழிற்சாலையே வீட்டுக்குள் சட்டவிரோதமாக இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார் அந்த வீட்டுக்குள் எப்படி தீ பிடித்தது என்று ஆராய்ந்தனர்.
அப்போதுதான் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் பயன்படுத்தி இருந்ததால் ஜங்ஷன் பாக்ஸில் தீப்பிடித்து, அதனால் எரிவாயு குழாய் சேதமடைந்திருந்ததும், அதனால் அங்கு பெரும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்பு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் உடனடியாக மின் இணைப்பு மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றை துண்டித்த போலீசார் அந்த தெரு முழுவதும் சீல் செய்தனர், மேலும் தப்பி ஓடியவர்களை தேடத் தொடங்கினர்.

மற்ற செய்திகள்
