102 குழந்தைகள்.. 12 மனைவிகளுக்கும் கணவன் போட்ட ஆர்டர்.. கடைசியா அரசாங்கம் வரை விஷயம் போய்டுச்சு.. யாரு சாமி இவரு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உகாண்டா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது 102 குழந்தைகளை வளர்ப்பது சிரமாக இருப்பதாகவும் அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Also Read | புருஷன் ஊருக்கு போய்ட்டாரு.. ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த மனைவி.. கொஞ்ச நாள்ல நடந்த பயங்கரம்..!
உகாண்டா நாட்டின் புகிசா பகுதியை சேர்ந்தவர் மூசா ஹசாஹ்யா. தற்போது இவருக்கு 67 வயது ஆகிறது. இவர் கடந்த 1971 ஆம் ஆண்டு ஹனிஃபா என்ற பெண்மணியை திருமணம் செய்திருக்கிறார். அப்போது மூசாவுக்கு வயது 16. பள்ளி படிப்பை முடித்தவுடன் மூசாவுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. 2 ஆண்டுகளில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறார். அதனை தொடர்ந்து ஆண்டுகள் செல்ல செல்ல அடுத்தடுத்து திருமணம் செய்திருக்கிறார் மூசா.
தற்போது 12 மனைவிகளுடன் வசித்து வரும் மூசாவுக்கு மொத்தம் 102 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் புகிசாவில் உள்ள 12 படுக்கை அறைகள் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் தற்போது வசித்து வருகிறார். விவசாய நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை கொண்டிருக்கும் மூசா இனிமேல் குழந்தைகள் வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறார். அதனால் உடல் மற்றும் மன ரீதியாக தகுதி பெற்ற தனது மனைவிகளை குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி வலியுறுத்தி வருகிறார் மூசா.
முன்னைப்போல சூழ்நிலை இல்லாததால் குடும்பத்தை பராமரிக்க சிரமப்படுவதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்கிறார் மூசா. இருப்பினும் விவசாயம் மூலமாக தனது குடும்பத்துக்கு தேவையான உணவு கிடைத்தாலும், தனது குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் அவர். தற்போதைய நிலையில் மூசாவுக்கு 568 பேர குழந்தைகள் இருக்கின்றனராம். இவர்கள் அனைவருடன் வசித்து வரும் மூசா தனது மனைவிகள் அனைவரையும் சரி சமமாக நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த காலத்தில் அதிக திருமணங்கள் செய்து கொள்வது பெரும் சிரமான காரியம் என்றும் ஆகவே, அதிக திருமணங்களை செய்துகொள்ள வேண்டாம் எனவும் அந்த ஊர் இளைஞர்களை வலியறுத்தி வருகிறார் மூசா. அந்த கிராமத்தின் நிர்வாக தலைவராக இருக்கும் மூசா, அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டு அதன் பின்னரே முடிவெடுப்பார் என்கிறார் அவருடைய முதல் மனைவி ஹனிஃபா.
இதுபற்றி அவர் பேசுகையில்,"அவர் அனைத்து விஷயங்களிலும் எங்களுடன் கலந்துரையாடுவார். எல்லா தரப்பினரிடமும் கேட்கும் முன் முடிவெடுக்க அவர் அவசரப்படுவதில்லை. அவர் யாரையும் துன்புறுத்துவதில்லை. அவர் எங்கள் அனைவரையும் சமமாக நடத்துகிறார்" என்றார்.

மற்ற செய்திகள்
