"எங்கேயும் காதல்".. சிக்கித் தவித்த வருங்கால கணவர்.. கோதாவில் இறங்கி பெண் செய்த உதவி.. மெய்சிலிர்த்த நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக இரு மனதுக்கு இடையே உருவாகும் காதல் என்பது பணம், மதம், மொழி, அந்தஸ்து என எந்த விஷயங்களையும் பார்க்காமல் உருவாகும்.

Also Read | கிறிஸ்துமஸ் Gift.. ரொனால்டோ-க்கு காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.. வாயடைச்சுப்போன நெட்டிசன்கள்.. வீடியோ..!
ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு முன்னெடுத்து செல்லும் சமயத்தில், எத்தனை தடைகள் வந்தாலும் அந்த காதலை எதுவுமே செய்ய முடியாது. இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு காதல் ஜோடி குறித்த கதை தான் இணையத்தில் அதிகம் பரவி, பலரையும் சபாஷ் போட வைத்து வருகிரது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நான்சாங் என்னும் மாகாணத்தை சேர்ந்தவர் சோவ் (Zhou). இந்த பெண் ஹூ (Hu) என்ற நபரை காதலித்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில் இந்த வருட இறுதியில் சோவ் மற்றும் ஹு ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இந்த நிலையில் தான் காதலனான ஹூ கடன் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அவருக்கு ஏதாவது ஒரு வழியில் உதவும் காதலி மற்றும் வருங்கால மனைவியான சோவ் முடிவு செய்துள்ளார்.
முதலில் காதலனான ஹுவுக்கு இருந்த சுமார் 21 லட்சம் ரூபாய் கடனை சோவ் அடைத்ததாகவும் தகவல்கள் கூறுகிறது. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே ஹு கடன் காரணமாக சிக்கியதால் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணிற்கு வழங்கப்படும் பணம் உள்ளிட்ட வேறு சில விலை மதிப்புள்ள பொருட்களையும் வேண்டாம் என சோவ் வாங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காதலி உதவி செய்யும் அளவுக்கு அந்த மாப்பிள்ளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால், சிலர் இது தொடர்பாக நெகட்டிவ் கருத்துக்களையும் தெரிவித்து வந்திருந்தனர். ஆனால் இந்த எதிர்மறை கருத்துக்கள் குறித்து பேசும் சோவ், எனக்கு அவரின் அன்பு தான் முக்கியம் என்றும் பணம் முக்கியமில்லை என்றும் கூறி உள்ளார். அதே போல, நிச்சயம் தனது குடும்பத்திற்கான உதவியை வருங்காலத்தில் அவர் செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் சோவ். மறுபக்கம் தனது வருங்கால மனைவி சோவ் செய்த உதவிக்கு இனி கடினமாக உழைத்து பணத்தை திருப்பி கொடுப்பேன் என்றும் உறுதியாக தெரிவிக்கிறார் ஹு.
வருங்கால கணவருக்காக பெண் ஒருவர் செய்த உதவி தொடர்பான செய்தி, தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
Also Read | திருடிய பணத்தில் புது பைக்.. வாட்சப் ஸ்டேட்டசால் வசமாக சிக்கிய கும்பல்.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்..!

மற்ற செய்திகள்
