'போலீஸ்' வாகனத்தை நிறுத்தி 'பதறிய' கணவன்... 'மோசமான' மனைவியின் 'உடல்நிலை'... 'போலீஸ்காரர்' செய்த 'வியப்பூட்டும்' செயல்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 14, 2020 11:08 AM

அமெரிக்காவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரியின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.

The police officer who help the pregnant women to birth the child

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் வேலி நகரில் ஜெரேமி டீன் என்பவர் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நகரின் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலையில் 2 கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தினார்.

அதில் ஒரு வாகனத்திற்குள் இருந்து பதற்றத்துடன் ஓடிவந்த நபர், தனது மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும், மருத்துவமனை செல்வதற்குள் பிரசவம் ஆகிவிடுமோ என பயப்படுவதாகவும் கூறினார்.

உடனே தனது வாகனத்திலிருந்து 2 கையுறைகளை எடுத்து மாட்டிக் கொண்ட அதிகாரி, வலியால் துடித்த பெண்ணுக்கு தைரியம் கூறி குழந்தை பிறக்க உதவினார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து தாயையும், சேயையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து  சிறிது நேரம் தடைபட்டது. போலீஸ் அதிகாரியின் இந்த செயலுக்கு அப்பகுதியினரிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags : #AMERICA #PREGNENT WOMEN #POLICE OFFICER #WEST VALLEY