உலகின் சக்தி வாய்ந்த '100 நபர்கள்' பட்டியலில் 'அவர்' பெயரா...? 'ரொம்ப சைலன்டான மனுஷன்...' 'வெளியவே வர மாட்டாரு...' - 'டைம்' இதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Sep 16, 2021 05:52 PM

பிரபல டைம் இதழ் நடத்திய 2021-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது  அந்த பட்டியலில் தாலிபான் (Taliban) தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பராதரும் (Mullah Baradar) இடம் பெற்றுள்ளார்.

Taliban leader Mullah Baradar named by Time magazine

ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றிய நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அவர்களின் ஆட்சி குறித்து கவலை கொண்டுள்ளது. தற்போதைய தாலிபான் தலைமையின் தற்காலிக துணைப்பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார் முல்லா பராதர்.

Taliban leader Mullah Baradar named by Time magazine

முல்லா பராதர் தாலிபான்களில் மிகவும் அமைதியானவர், ரகசியமானவர், வெளியுலகிற்கு அதிகமாக வராதவர். ஆனால், அவரே டைம் இதழ் நடத்திய உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம் பெற்றுள்ளார். தோஹாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் ஆப்கானுக்கான மறுசீரமைப்புக் குழுவின் சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலிலாஜ்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரும் முல்லா பராதர் தான்.

Taliban leader Mullah Baradar named by Time magazine

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, அங்கு பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர் முல்லா பராதர். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்தும் முடிவு அனைத்தும் முல்லா பராதர் தலைமையில் எடுக்கப்பட்டதாகும் என டைம் இதழ் தெரிவித்துள்ளது.

Taliban leader Mullah Baradar named by Time magazine

கடந்த 2010-ஆம் ஆண்டில் முல்லா பராதரை பாகிஸ்தானில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அதன்பின் 2018-ஆம் ஆண்டு முல்லா பராதர் விடுவிக்கப்பட்டார். தாலிபான் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா பராதர் அமெரிக்காவுடன் நடத்திய அமைதிப் பேச்சில் முக்கிய பங்கு வகித்தார் ஆனால், அவருக்கு தற்போதைய அரசியல் துணைப் பிரதமர் பதவிதான் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Taliban leader Mullah Baradar named by Time magazine | World News.