'லீக்' ஆன தாலிபான் 'ஒருத்தரோட' ஆடியோ...! 'இதெல்லாம்' வேற நடந்துருக்கா...? 'எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சிட்டு இருந்துருக்காங்க...' - வெளியான பகீர் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான் தலைவர் ஒருவர் பேசும் ஆடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அங்கு புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-யின் தலைவரான பயஸ் ஹமீது காபுல் சென்று அங்கு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. இந்த நிலையில், தற்போது தங்களுக்கென இருந்த நல்ல பெயரை பாகிஸ்தான் நாசம் செய்துவிட்டதாக தாலிபான்களின் தளபதி ஒருவர் பேசிய ஆடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் சக தளபதிகளுடன் பேசும் தாலிபான் ஒருவர், உலக அளவில் நமக்கு இருந்த நல்ல பெயரை பாகிஸ்தான் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டதாக கூறுகிறார். மேலும் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்ற விவகாரத்தில், ஐஎஸ்ஐ உளவுத்துறையின் தலைவர் தேவையில்லாமல் தலையிட்டு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகவும் அந்த தளபதி கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல், அதிபர் மாளிகையில் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் தாலிபான் தளபதிகளுக்கும், ஐஎஸ்ஐ பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நடுவே நின்றதால் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் அந்த ஆடியோவில் கூறுகிறார்.
இந்த ஆடியோ ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தானின் தலையீட்டையும், தற்போது இருதரப்புக்கும் இடையே இருக்கும் விரோதத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறையின் தலையீட்டை வெளிக்கொண்டு வந்த இந்த ஆடியோ பின்னர் அந்த முகநூல் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது.