'திபுதிபுவென நார்வே தூதரகத்திற்குள் புகுந்த தாலிபான்கள்'... 'ச்சே, இவ்வளவு மோசமான காரியத்தை செஞ்சு இருக்காங்க'... வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்நார்வே நாட்டின் தூதரகத்தைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அதனுள் புகுந்து அவர்கள் செய்த அராஜக செயல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அங்குப் பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை அறிவித்து விட்டு ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பழைமை வாதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் தாலிபான்கள் பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கத்தடை, மது அருந்தத் தடை,பெண்கள் வேலைக்குச் செல்லத்தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில், காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தைத் தாலிபான்கள் நேற்று கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய போதே, நார்வே தூதரக அதிகாரிகள் தாயகம் திரும்பிவிட்டனர். தற்போது ஒரு சில அலுவலர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நார்வே நாட்டின் தூதரகத்திற்குள் நுழைந்த தாலிபான்கள் அங்குள்ள ஒயின் பாட்டில்கள், உள்ளிட்ட மது பானங்களை அடித்து நொறுக்கினார்கள்.
ஆனால் அதோடு நிறுத்தாமல் அங்கிருந்த குழந்தைகளின் புத்தகங்களைக் கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், இந்த காட்சிகளைப் பார்த்த பலரும் அதிர்ந்து போனார்கள். குழந்தைகளின் புத்தகங்களைக் கிழிக்கும் இவர்களா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.