'இங்க ஒண்ணு பேசுறது...' 'வெளிய போய் வேற ஒண்ணு சொல்றது...' 'இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுங்க...' 'அஷ்ரஃப் கனி அன்னைக்கு 'என்ன' சொன்னார் தெரியுமா...? - கடுப்பில் அமெரிக்கா...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் விவகாரத்தில் பாகிஸ்தான் (Pakistan) இரட்டை வேஷம் போடுவதாகவும், இதனால் அமெரிக்கா (America) பாகிஸ்தானுடனான ராணுவ உறவு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது இருக்கும் என அமெரிக்கா கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் (Antony blinken) ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், இது அவர்களின் ராணுவ உறவை பாதிக்கும் என கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், பாகிஸ்தான் ஆப்கான் விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரில் பாகிஸ்தான் என்ன பங்காற்றியது என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு செய்ய வேண்டியது வரும்.
பாகிஸ்தான் இதுவரை நேட்டோ அமைப்பைச் சாராத, அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவக் கூட்டாளி என்ற அந்தஸ்துடன் இருந்து வருகிறது, இனி அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும்.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி காபூலை விட்டுத் தப்பிச் சென்றது குறித்து எங்களுக்கு தெரியாது. அவர் ஆப்கானில் இருந்து வெளியேறுவதற்கு முந்தைய நாள் (ஆக. 14) என்னுடன் தொலைபேசியில் உரையாடியபோது கூட சாகும் வரை போராடப் போவதாகக் கூறினாா்.
அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயாா்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு காரணமான அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தாலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
இதனாலேயே அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தாலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற முடிவு செய்த பிறகே தாலிபான்கள் ஆப்கானில் பல பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறி வந்தனர்.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தான். இதனால் தான் அமெரிக்கா பாகிஸ்தானுடனான ராணுவ உறவு மறுபரிசீலனை செய்யப்படுகிறது' என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அமைச்சா் பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.

மற்ற செய்திகள்
