ஒரே மடக்கில் முழு பாட்டில் வோட்காவை காலி செய்த இளைஞர்.. அடுத்து நடந்ததுதான் செம்ம ஷாக்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மதுப் பழக்கம் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்குகளை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் மதுவினால் மனித குலம் தொடர்ந்து அவதிப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அதுவும் இளைஞர்களிடையே பெருகி வரும் மதுப் பழக்கம் அவர்களது எதிர்காலத்தையே அசைத்துப் பார்த்துவிடும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் ஒரு முழு வோட்கா பாட்டிலையும் முழுவதுமாக குடித்த காரணத்தால் தற்போது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
"பூணூல் போடுறத தடை செய்வீங்களா?".. ஹிஜாப் விவகாரத்தில் அமீர் எழுப்பிய சரமாரி கேள்விகள்..!
கல்லூரி மாணவர்
அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவர் டேனியல் சாண்டுல்லி தான் இந்த விபரீத சம்பவத்தை நிகழ்த்தி இருப்பவர். இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மிசோரி பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் தங்குவதற்கு விண்ணப்பித்திருக்கிறார். இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி, மிசோரி பல்கலைக்கழகத்தின் விடுதியில் சேர்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருந்த மானவர்கள் சிலருடன் டேனியல் பேசியிருக்கிறார். அப்போது அந்த மாணவர்கள் ஒரு முழு வோட்கா பாட்டிலை டேனியலிடம் கொடுத்து அதனை ஒரே மடக்கில் குடிக்க முடியுமா? எனக் கேட்டிருக்கின்றனர். இதனை சீரியஸாக எடுத்துக்கொண்ட டேனியல், ஒரே மடக்கில் முழு வோட்கா பாட்டிலையும் காலி செய்திருக்கிறார்.
இதனால் நிலை தடுமாறி டேனியல் கீழே விழுக, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
மாரடைப்பு
முழு வோட்கா பாட்டிலையும் ஒரே மடக்கில் குடித்ததால், டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டேனியல் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தாலும் அவருடைய மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், டேனியலின் ரத்தத்தில் ஆல்கஹால் உள்ளடக்கம் 0.486 சதவீதமாக இருந்ததுள்ளது, இது சட்டப்பூர்வ வரம்பை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,"டேனியல் சுய நினைவில் இல்லை. அவரால் கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ பேசவோ முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டேனியல் குடும்பத்தின் வழக்கறிஞர் டேவிட் பியாஞ்சி கூறுகையில், தனது 30 வருட தொழில் அனுபவத்தில் தான் சந்தித்த மோசமான செயல் இது என கூறி உள்ளார்.
ஒரே மடக்கில் முழு வோட்கா பாட்டிலையும் காலி செய்த இளைஞர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மிசோரி பல்கலைக்கழக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீங்க தாம்பத்தியத்தில் active- ஆ?.. தப்பா புரிஞ்சுகாதீங்க.. டாக்டர் தந்த முக்கிய அட்வைஸ்..!