செல்போன்ல பேசுற மாதிரி நடிச்சிட்டு இருந்திட்டு, திடீரென.. 63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்.. வரைபடம் வெளியிட்ட போலீசார்
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரி: புதுச்சேரி பாகூர் பகுதியில் நிலத்தில் வேலை செய்ய சென்ற 63 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் கேட்ட இளைஞர்:
புதுச்சேரி பாகூர் அடுத்துள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுள்ள பெண் ஒருவர் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள தன்னுடைய நிலத்திற்கு வேலை செய்வதற்காக கடந்த வாரம் சென்றுள்ளார். அங்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சுமார் இருபத்தி எட்டு வயதுள்ள இளைஞர் ஒருவர். இந்த முதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து தன்னுடைய உறவினருக்கு பேச வேண்டும் என்று செல்போன் கேட்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வு:
அதற்கு மூதாட்டி செல்போனும் கொடுத்துள்ளார். அப்போது போனில் பேசுவது போல் நடித்து அருகில் கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து அந்த பெண்ணின் பின்புற கழுத்தில் அடித்துள்ளார். அதில் பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணை ஒரு மறைவான இடத்தில் இழுத்து சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் உறவினர்கள் அந்த மூதாட்டிக்கு மதிய உணவு எடுத்து வந்துள்ளனர். அவர் எங்கும் காணாததால் சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த புதரிலிருந்து இளைஞர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
தீவிர விசாரணை:
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, மூதாட்டி மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்துள்ளார். நிலைமையை உணர்ந்து மர்ம நபரை துரத்தி சென்றுள்ளனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து அந்த மூதாட்டியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்து பின்னர் ராஜீவ்காந்தி பெண்கள் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலின் பேரில் பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
குற்றவாளியின் வரைபடம்:
கடந்த ஒரு வாரமாக குற்றவாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் குற்றவாளியை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் சம்பவம் அருகே இளைஞர் தப்பியோடியதை பார்த்த சிலர் கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளியின் வரைபடத்தை வரைந்து வெளியிட்டுள்ளனர். அந்த வரைபடத்தை கொண்டு குற்றவாளிகளை புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் போலீசார் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கழுத்தில் QR code.. செல்போனில் UPI வாலட்.. டிஜிட்டல் யாசகம் பெறும் இந்த மனிதன் யார்?

மற்ற செய்திகள்
