ஆன்லைனில் ஆடையில்லாத வீடியோ கால்.. வராததால் கோபத்தில் கிளம்பிய இளைஞர்.. அடித்து வெளுத்த அழகி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : ஆன்லைன் அழகிகளை நம்பி, சுமார் 30 ஆயிரம் ரூபாயை இளைஞர் ஒருவர் இழந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் (வயது 24) ஒருவர், மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர், பணம் செலுத்தி அழகிகளுடன் பேசும் செயலி ஒன்றின் மூலம், சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி, பேசி வந்ததாக கூறப்படுகிறது. எதிர்முனையில், இளைஞருடன் பேசும் அழகிகள், பாலியல் முறையை தூண்டும் வகையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
அடிமையான இளைஞர்
அதன் பிறகு, சில அந்தரங்க செயல்களிலும் அந்த பெண்கள் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இறுதியில், சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் சில ஆபாச செயகைகளை காண்பிப்பார்கள் என்றும் தெரிகிறது. இப்படி அந்த இளைஞரும், சுமார் 3 முறை வரை, அந்த செயலி மூலம் அழகிகளுடன், பாலியல் ரீதியாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
தவறான விருப்பம்
இதன் காரணமாக, அந்த இளைஞர், அந்த பழக்கத்திற்கு அதிகமாக அடிமைகியுள்ளார். இந்நிலையில், ஒரு நாள் முழுவதும் ஆன்லைனில் அழகிகளுடன் நிர்வாண வீடியோ கால் பேச வேண்டும் என அந்த இளைஞர் முடிவு செய்துள்ளார். அவரின் விருப்பப்படி இருக்க வேண்டும் என்றால், அதற்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என அழகிகள் கூறியுள்ளனர்.
அதிர்ச்சியில் இளைஞர்
இதன் பிறகு, அழகிகள் அனுப்பிய வங்கி கணக்கு விவரத்தைக் கொண்டு, 30 ஆயிரம் ருபாய் பணத்தையும் அந்த இளைஞர் செலுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் சொன்னபடி, நாள் முழுக்க எந்த அழகிகளும் பேச வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தான் பணத்தை இழந்ததை எண்ணி, அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அரசு வேலை.. 5 லட்சம் கொடு .. அமைச்சர்களுக்கும் பங்கு தரணும்! வீடியோவில் சிக்கிய திமுக நகர செயலாளர்
பல விதத்தில் போராடிய இளைஞர்
இதற்கு முன்பாக, தான் பேசிய அழகி ஒருவரின் மொபைல் நம்பரை முன்பே வாங்கி வைத்திருந்தார். அந்த எண்ணிற்கு அழைத்த இளைஞர், யாரும் வீடியோ காலில் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதற்கு மறுமுனையில் பேசிய அழகி, சரிவர விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக, தனது பணத்தை பெற பல விதத்தில் போராடியுள்ளார் அந்த இளைஞர்.
அழகி செய்த காரியம்
இதனைத் தொடர்ந்து, அந்த செயலியிலுள்ள அழகிகள் சிலரை மீண்டும் அந்த இளைஞர் தொடர்பு கொண்டார். அப்போது, ஒரு பெண், சென்னை அசோக் நகர் பகுதி அருகே தனியாக வரும்படி, இளைஞரை அழைத்துள்ளார். இதனால், தன்னுடைய பணம் மீண்டும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பைக் ஒன்றில் இளைஞர் சென்றுள்ளார். அழகி கூறிய இடத்திற்கு தனியாக சென்றுள்ள நிலையில், அந்த அழகியோ, 4 ஆண் நண்பர்களுடன் அங்கு வந்துள்ளார்.
ஆண் நண்பர்களுடன் எஸ்கேப்
அப்போது இளைஞர், அந்த பெண்ணிடம் தன்னுடைய பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதன் பெயரில், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, இளைஞரை சரமாரியாக அந்த அழகி தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அந்த இளைஞர் அணிந்திருந்த செயின் மற்றும் அவரின் பைக்கையும் அவர்கள் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தேடும் போலீஸ்
பின்னர், இந்த சம்பவம் குறித்து இளைஞரும், குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அழகி உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
