'62 நாளா கோமா...' 'எந்த மாயமும் இல்ல, மந்திரமும் இல்ல...' அவர் சொன்ன 'அந்த ஒரு' வார்த்தை...! - அடுத்த செகண்டே நினைவு திரும்பிடுச்சு...!
முகப்பு > செய்திகள் > உலகம்தைவான் நாட்டில் 62 தினங்கள் கோமாவில் இருந்த 18 வயது வாலிபர் ஒருவர், தனது சகோதரர் அவருக்கு பிடித்த சிக்கன் ஃபில்லெட்டுகள் பற்றி கூறியதும் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக எழுந்து உள்ளார்.

வடமேற்கு தைவானைச் சேர்ந்த வாலிபர் சியு. இவர் அண்மையில் மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளார். அவரது உள் உறுப்புகளில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அவர் ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சியு ஹ்சிஞ்சு கவுண்டியில் உள்ள டன் யென் என்ற பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனை ஐ.சி.யுவின் இயக்குனர் ஹ்சீ சுங்-ஹ்சின், சியுவுக்கு மண்ணீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் வயிற்று எலும்பு முறிவுகளிலிருந்து இரத்தப்போக்கு இருப்பதாக கூறியுள்ளார்.
மருத்துவர்கள் சியுக்கு மொத்தம் 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைகள் முடிந்த பின்பும் அவர் கோமாவில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், சியுவின் மூத்த சகோதரர் மருத்துவமனைக்குச் சென்று நகைச்சுவையாக, "புரோ நான் உங்களுக்கு பிடித்த சிக்கன் ஃபில்லட்டை சாப்பிடப் போகிறேன்" என அடிக்கடி கூறியுள்ளார். இதனால் அவரது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது.
சியுவுக்கு மிகவும் விருப்பமான உணவைப் பற்றி சொன்னதும் அவருக்கு சுயநினைவு வரத் தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பிடித்த உணவை ஞாபகப்படுத்த அவர் முழு குணமடைந்து, இப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.
இதன்பின்னர், மருத்துவமனை வந்த சியு மருத்துவமனை ஊழியர்களுக்கு கேக் வழங்கி அவர்களின் கவனிப்பு மற்றும் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
