டெக்னாலஜியில் அசத்திய 19 வயது மாணவர்.. மிரண்டு போன எலான் மஸ்க்.. 5,000 டாலர் வாங்கிட்டு எனக்கு 'அத' பண்ணி கொடுங்க
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒனருமான எலான் மஸ்க், தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் நகர்வுகளைக் கண்காணிக்கும் @ElonJet என்ற ட்விட்டர் கணக்கை நீக்க 19 வயதான கல்லூரி மாணவர் ஒருவருக்கு 5,000 டாலர் வழங்கியுள்ள சமபவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2 வருடத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் டெக் சேவைகளின் எழுச்சி என மொத்த வர்த்தகச் சந்தையும் புதிய பரிமாண வளர்ச்சியை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் புதிய வளர்ச்சிப் பாதையில் எலான் மஸ்க் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டு உள்ளார். வேகமாக வளரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த நாசா கொடுத்த ஆர்டர், ஸ்டார்லிங்க் சேவை விரிவாக்கம் என எலான் மஸ்க் தலைமை வகிக்கும் அனைத்து நிறுவனமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில், தொழில்நுட்பத்தில் சிறந்து வழங்குபவர்களுக்கு எலான் மஸ்க் தேடி போய் பாராட்டுவதையும், அவர்களை தன்னுடைய நிறுவனத்தில் உபயோகப்படுத்துவதையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
"Elon Musk's Jet" என்ற ட்விட்டர் கணக்கு, பொதுவில் கிடைக்கும் விமானப் போக்குவரத்துத் தரவைக் கண்காணிக்கும் போட்களைப் பயன்படுத்தி, எலன் மஸ்க்கின் தனிப்பட்ட ஜெட் விமானத்தின் இயக்கங்களைக் காட்டி வந்தது.
இது தொடர்பாக, தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தைக் கண்காணிக்கும் ட்விட்டர் கணக்கின் உரிமையாளரான மாணவர் ஜாக் ஸ்வீனிக்கு செய்தி அனுப்பிய எலன் மஸ்க், "இதை நீங்கள்அகற்றி தர முடியுமா? இது ஒரு பாதுகாப்பு ஆபத்து" என்று கேட்டார்.
முதலில் மாணவர் $50,000 டாலர் வேண்டும் என்று கூறியுள்ளார், அவர் தொகையை கூறியதும் இதுகுறித்து யோசித்து சொல்கிறேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். பிறகு ஒரு வழியாக மஸ்க், ஸ்வீனிக்கு $5,000 வழங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்
