‘இன்னும் 3 நாள்தான்’.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஃபீவர்.. முதல்முறையா வெளியான ‘வேறலெவல்’ போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 16, 2020 02:07 PM

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டி நடைபெறும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மைதானங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

IPL2020: First pictures of Abu Dhabi\'s Sheikh Zayed Stadium

13-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஆறு மாதங்களுக்கு மேலான இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு நிலவி வருவதால், இந்த வருடம் மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் 120 நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிப்பரப்புவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானங்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020: First pictures of Abu Dhabi's Sheikh Zayed Stadium | Sports News.