"தமிழர்கள் என்னோடு கைக்கோர்க்க வேண்டும்!" - இலங்கைப் பிரதமர் 'மகிந்த ராஜபக்ச' பேச்சின் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தன்னுடன் கைக்கோர்க்குமாறு இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
திருகோணமலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்கள் நாட்டை முதன்மைப்படுத்த தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். சஜித் - ரணில் தரப்பினருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், தங்களுடைய பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் அரசாங்கத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் முன்பு இருந்த நிலைமை தற்போது மாறிவிட்டதால் மக்கள் சுதந்திரமாக விருப்பமான இடங்களுக்கு செல்ல முடியும் என்றும், அந்த சுதந்திரத்தை வழங்க அர்ப்பணிப்பு செய்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை நினைவு கூறும் விதமாக ஜூலை 23ஆம் தேதியை அனுசரிக்கும் கருப்பு ஜூலை நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படுகொலையான இலங்கை தமிழர்களின் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.