“இறந்துட்டாரு.. இனி ஒன்னும் பண்ண முடியாது!”.. உறுதி செய்த ஹாஸ்பிடல்.. “மார்ச்சுவரி” சென்று பார்த்த மகளுக்கு காத்திருந்த ‘இன்ப அதிர்ச்சி’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொலம்பியாவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்ட தந்தைக்கு உயிர் இருப்பதை அவரது மகள் கண்டுபிடித்த் சம்பவம் நடந்துள்ளது.

கொலம்பியாவின் சின்செலஜோ நகரைச் சேர்ந்த ஜோஸ் முனாஸ் ரோமிரோ எனும் 67 வயதான நபருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை உண்டான நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவரது உடலை மருத்துவமனை பிணவறையில் கிடத்தினர். ஆனால், ஜோஸ் முனாஸின் குடும்பத்தாரோ, அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவரின் உடலை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையெல்லாம் மீறி, ஜோஸின் மகள் பிணவறைக்கு ரகசியமாக சென்று பார்த்துள்ளார்.
அப்போது தனது தந்தைக்கு மூச்சு இருந்ததை கண்ட, ஜோஸின் மகள், உடனே கத்தி கூச்சலிட்டு, தனது தந்தையை மீண்டும் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். மேலும், மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக அவர் புகாரும் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
