“மொத மொத ஆகாய விமானத்துல போனவர் ராவணன்தான்.. சீதையை அவர் கடத்தல?” .. புதுசா இருக்குல்ல? .. அதிரவைத்த இலங்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 19, 2020 10:29 PM

அண்மையில், உண்மையான அயோத்தி இருப்பது தங்கள் நாட்டில்தான் என்று நேபாளம் அதிரவைத்தது.  அது மட்டும் அல்லாமல், ராமர் ஒரு நேபாளி, சீதை தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Facts to Prove Ravana Was 1st to Use Aircraft, Says SriLanka

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் உலகின் முதல் விமானி ராவணன்தான் என்று அடித்துச் சொல்வதாக இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது.  இதுகுறித்து இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தரப்பட்ட விளம்பரத்தில்  உலகின் முதல் விமானி மன்னர் ராவணன்தான் என்றும்,  அதை நிரூபிப்பதற்கான ஆதாரம், ஆவணம், வரலாற்றுப் புத்தகம் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும், அரசு நடத்தும் ஆய்வுக்கு அது பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இலங்கை விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே பேசும்போது, “மன்னர் ஒரு விமானி, ஆகாய மார்க்கமாக சென்ற முதல் ஆளே அவர்தான். இது கட்டுக்கதை அல்ல, வரலாறு என்கிற உண்மையை அடுத்த 5 வருடத்துக்குள் நிரூபிப்போம். இதற்கான வரலாற்று ஆராச்சிகள் தேவைப்படுகின்றன. எனவே  தையை ஆகாய மார்க்கமாக கடத்திச் சென்று மன்னர் ராவணன் இலங்கையில் சிறை வைத்ததாக ராமாயணத்தின் வாயிலாக இந்திய பதிப்புகள் சொல்வது குறிப்பிடுவது தவறு. அவர் உன்னதம் மிக்க மன்னர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Facts to Prove Ravana Was 1st to Use Aircraft, Says SriLanka | World News.