”மொதல்ல என் உடம்ப ’டச்’ பண்ணாங்க... அப்புறம், ’வேற மாதிரி’ தாக்க ஆரம்பிச்சாங்க...” - சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணுக்கு, கடற்கரையில் நடந்த கொடுமை! - பேஸ்புக்கில் குமுறல்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jul 07, 2020 08:33 PM

இலங்கைக்கு சுற்றுலா சென்ற ரஷ்ய இளம்பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா? ' எனப் பதிவிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

srilanka tourism colombo galle beach russian woman molested police arr

ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்போது கொழும்பில் தற்போது வாழ்ந்து வருகின்றார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 5ஆம் தேதி தனது மூன்று நண்பர்களுடன் காலி முகத்திடலுக்கு மாலை வேளையில் சென்றுள்ளார். அவ்விடத்தில் குடிபோதையில் இருந்த இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் இவரிடமும், இவரின் நண்பர்களிடமும் தகாத முறையில் நடந்துள்ளார். மேலும் அந்த மர்ம நபர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகவும், துன்புறுத்தலுக்கு உட்படுத்தவும் முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லையை மீறி அந்த இளைஞர்கள் தனது உடலைத் தொட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடன் இருந்த நண்பர்களிடமும் சண்டைக்கு சென்றதாகவும், அவர்களிடன் 'இவளைப் பகிர்ந்து கொள்வோம்' என கூறி தன் நண்பர்களை தாக்கியதாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தான் தனது செல்பேசியில் சம்பவத்தை பதிவு செய்ய ஆரம்பித்ததை கவனித்த  இளைஞர்கள், பின்னர் அமைதியடைய ஆரம்பித்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கின்றார். ஆனால் அங்கிருந்த மற்றொரு இளைஞர் தனது கையின் மீது செல்பேசி கீழே விழும் வண்ணம் தாக்குதல் நடத்தியதுடன், தனது நண்பர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பொது இடத்தில் நடந்த இச்செயலை தடுக்க அங்கிருக்கும் யாரும் முன்வரவில்லை எனவும், காவல்துறைக்கு புகார் அளித்து 20 நிமிடங்கள் கழித்து தான் சம்பவ இடத்திற்கு வந்தனர் எனவும் கூறியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு இளைஞரின் படமொன்றை வெளியிட்ட அந்த ரஷ்ய பெண், இந்த பிரச்சனையை முதலில் ஆரம்பித்தவர் என கூறியுள்ளார். தற்போது ரஷ்ய பெண் அளித்த புகாரின் பெயரில் போலீசார் அந்த இளைஞர்கள் கும்பலை தேடிய நிலையில, கொழும்பு கோட்டை போலீசார் நடத்திய சுற்றி வளைப்பில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

இலங்கை நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையையும் எதிர்பார்த்தே காணப்படுகின்றது. தற்போது பாதிக்கப்பட்ட ரஷ்ய பெண் முகநூலில் பதிவிட்ட 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா? என்ற கேள்வி அந்நாட்டின் சுற்றுலா துறையை மேலும் பாதிக்கும் என கூறப்படுகிறது. இது முதல் சம்பவம் இல்லையென்றும், கடந்த சில வருடங்களாக பல்வேறு விதத்திலும் தொடர்ச்சியாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு கவலையில் உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Srilanka tourism colombo galle beach russian woman molested police arr | World News.