கொழும்புவில் நடந்த 'கார்' விபத்து... பிரபல 'இலங்கை' கிரிக்கெட் 'வீரர்' கைது!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jul 05, 2020 12:51 PM

இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குஷால் மெண்டிஸ் கார் விபத்து காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srilankan cricket player arrested for car accident

25 வயதான இலங்கை பேட்ஸ்மேன் குஷால் மெண்டிஸ் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் சென்று கொண்டிருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மெண்டிஸ் கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குஷால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுவரை 44 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 76 ஒரு நாள் போட்டிகளில் குஷால் மெண்டிஸ் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள நிலையில், ஊரடங்குக்கு பின்னான தேசிய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில், கார் விபத்தில் குஷால் மெண்டிஸ் கைதான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்  உலக கோப்பையில் இலங்கை அணி தோற்றது தொடர்பாக சூதாட்டம் நிகழ்ந்ததாக சர்ச்சை கிளம்பிய நிலையில், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Srilankan cricket player arrested for car accident | Sports News.