“ஐயோ.. எம் புள்ள உசுர காப்பாத்தணுமே!”.. மகன் மற்றும் மகனின் நண்பனுக்காக தாய் எடுத்த முயற்சி.. இறுதியில் நடந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த தனது மகனையும் மகனது நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த தாய் பரிதாபகரமாக மகன் கண் முன்னாலேயே உயிரிழந்த சோகம் நடந்தேறியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நார்போல்க் கடற்கரையில் Danni என்கிற 30 வயது பெண் தனது மகன் மற்றும் மகனின் நண்பனுடன் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது கடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது மகனும், மகனின் நண்பனும் கடல் தண்ணீரில் சிக்கி தடுமாறுவதை அவர் கரையில் இருந்தபடி கவனித்துள்ளார்.
உடனே முன்பின் யோசிக்காத Danni தனது மகனையும் மகனின் நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்து விட்டார். இதனை கண்ட அருகில் இருந்த சிலரும் கடலுக்குள் குதித்தனர். அவர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்களால் Danni-ஐ காப்பாற்ற முடியவில்லை.
அதற்குள் விரைந்து வந்த முதல் உதவிக்குழுவினர் Danniயை கரைக்கு இழுத்து வந்து முதலுதவி செய்த போதும் Danni-ஐ காப்பாற்ற முடியவில்லை. தனது தாய்க்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல், மகன் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தபோது மனம் வெதும்பியதாக அங்கிருந்த ஒருவர் பதிவு செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
