CSK வின் ஹோலி கொண்டாட்டம்.. தல தோனியின் அன்பு வாழ்த்து.. தீயாக பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஹோலி பண்டிகை
இந்தியாவே ஒரு பண்டிகை தேசம் என வெளிநாட்டினர் பலமுறை குறிப்பிடுவது உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர் நம் மக்கள். அந்த வகையில் இன்று ஹோலி பண்டிகை என்பதால் இந்தியாவே களைகட்டி இருக்கிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும் வர்ணங்கள் கலந்த நீரை ஒருவர்மீது ஒருவர் ஊற்றியும் இந்த விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் மக்கள். குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் பண்டிகை பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
கொண்டாட்டத்தில் CSK வீரர்கள்
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஹோலி கொண்டாடும் வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் துவங்க உள்ள நிலையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி கொண்டாடியிருக்கின்றனர். அந்த அணி நிர்வாகம் இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், வீரர்கள் ஒருபுறம் கொண்டாட்டத்தில் இருக்க, கூலாக அங்குவரும் தல தோனி அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பேருந்துக்குள் ஹோலி கொண்டாடிய வீடியோவை பேட்ஸ்மேன் சுப்மன் கில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Also Read | மகளிர் தினம்: குஜராத் - பெங்களூரு அணி போட்டியை இலவசமாக பார்க்க ஏற்பாடு.. WPL -ன் அசத்தல் முயற்சி..!