தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா.. மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த பிரபலங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pichaimuthu M | Mar 08, 2023 02:30 PM

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவணப்பட இயக்குனர் ஜெயக்குமாரின் மகனுமான  நடிகர் பாலா(பாலக்குமார்) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Siruthai Siva Brother Bala Admitted In Hospital

Also Read | "மோகன் ஜி யாருனே தெரியாது".. வி சி க தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பான பதில்!

நடிகர் பாலா 'வீரம்' படத்தில் தல அஜீத்தின் தம்பியாக நடித்தார். ஏற்கனவே அவர் தமிழில் 'அன்பு' என்கிற படத்தில்  அறிமுகமானார். 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்தில் அவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தார். பின் நடிகர் பாலா மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா. இந்த படத்தின் மூலம் கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபல நாயகனானார் பாலா. 

Siruthai Siva Brother Bala Admitted In Hospital

Images are subject to © copyright to their respective owners.

மோகன்லாலின் புலிமுருகன் படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். தமிழில் அண்ணாத்த படத்தில் பல வில்லன்களில் ஒருவராக பாலா நடித்திருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

Siruthai Siva Brother Bala Admitted In Hospital

Images are subject to © copyright to their respective owners.

இவர் முதல் மனைவி அம்ருதாவை 2019ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் பாலாவுக்கு அவந்திகா எனும் 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகர் பாலாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Siruthai Siva Brother Bala Admitted In Hospital

Images are subject to © copyright to their respective owners.

 அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Siruthai Siva Brother Bala Admitted In Hospital

Images are subject to © copyright to their respective owners.

இந்த தகவலை அறிந்த பல பிரபலங்கள் குறிப்பாக இயக்குனர் சிறுத்தை சிவா, அவருடைய கல்லூரி கால நண்பரும் ஒளிப்பதிவாளருமான வெற்றி பழனிச்சாமி, நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Also Read  | "LEO, லால் சலாம் போன்ற பட பெயர்களை மாத்தனுமா?".. தொல். திருமாவளவன் வைரல் பதில்!

Tags : #HOSPITAL #SIRUTHAI SIVA #SIRUTHAI SIVA BROTHER #SIRUTHAI SIVA BROTHER BALA #SIRUTHAI SIVA BROTHER BALA IN HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Siruthai Siva Brother Bala Admitted In Hospital | Tamil Nadu News.