"அவ தான் எல்லாமே".. மனைவி அஸ்தியை 32 வருசமா பாதுகாத்த முதியவர்.. இறப்பதற்கு முன் எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Feb 16, 2023 08:08 PM

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலுமுள்ள காதலர்கள், இதனை வெகு விமரிசையாக கொண்டாடி இருந்தனர். தங்கள் மனதுக்கு மிகவும் பிடித்தமானவர்களிடம் காதலை வெளிப்படுத்துவது ஒரு பக்கமும், ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் மிகவும் சர்ப்ரைஸாக பரிசுகளை கொடுத்து தங்களின் பார்ட்னர்களை மனமுருக வைத்தது ஒரு பக்கமும் இருந்தது.

Man kept his wife memories safe for 32 years his letter emotional

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | தளபதி விஜய் பாணியில் சூப்பரா சொன்ன பிரபல கிரிக்கெட் வீரர்..! தீயாய் பரவும் ட்வீட்...

இதற்கு மத்தியில், திருமணமாகி ஒன்றாக வாழ்ந்து அதன் பின் உருவாகும் காதலால் ஏற்படும் நிகழ்வுகளும் உன்னதமாக உயர்ந்து நிற்கும். அந்த வகையில் ஒரு முதியவரின் காதல் கதை குறித்த செய்தி காதலர் தின சமயத்தில் பெரிய அளவில் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் போலாநாத் அலோக். இவரது மனைவி பெயர் பத்மா ராணி. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. தன்னுடன் பல ஆண்டுகள் ஒன்றாக இருந்த மனைவியின் மறைவு, பெரிய அளவில் போலாநாத்தை பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் தனது மனைவி பத்மாவின் அஸ்தியை கரைக்க விடாமல் சுமார் 32 ஆண்டுகளாக அதனை பாதுகாத்தும் வந்துள்ளார் போலாநாத். அந்த அஸ்தி அடங்கிய கலசம் ஒன்றை தன்னுடைய வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் கட்டி தொங்க விடவும் செய்திருந்தார்.

Man kept his wife memories safe for 32 years his letter emotional

Images are subject to © copyright to their respective owners.

அது மட்டுமில்லாமல், மனைவியின் அஸ்தி இருக்கும் கலசத்திற்கு ரோஜா பூவை வைத்து, ஊதுபத்தி கொளுத்தி வைக்கவும் செய்து அதனை வணங்கி முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டு வந்திருந்த போலாநாத், இறப்பதற்கு முன்பாக கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். அதில், தான் இறந்த பிறகு தன் உடல் தகனம் செய்யப்படும் நாளில் உயிரற்ற உடலில் மனைவியின் அஸ்தி கலசம் வைக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Man kept his wife memories safe for 32 years his letter emotional

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இருக்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி போலாநாத் அலோக் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு விருப்பப்பட்டது போன்றே மனைவியின் கலசத்தை வைத்து அவரின் உடலை அவர்களின் குடும்பத்தினர் அடக்கம் செய்திருந்தனர். இப்படி மிக மிக உருக்கமான இந்த காதல் கதையை போலாநாத் மறைவுடன் முடிவுக்கு கொண்டு வராமல் அதனை புதிய அத்தியாயமாகவும் அவர்களின் குடும்பத்தினர் தொடங்கி உள்ளனர்.

Man kept his wife memories safe for 32 years his letter emotional

Images are subject to © copyright to their respective owners.

அதாவது போலாநாத் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகிய இருவரின் அஸ்தியை ஒரே கலசத்தில் கலந்து அதே மாமரத்தில் கட்டி வைத்து குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். காதலர் தின சமயத்தில் போலாநாத்தின் காதலும் தற்போது பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது.

Also Read | "அவங்க கண்ணுல பயமில்ல".. 67 வயதிலும் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி.. துணிச்சலா Vibe செய்த மூதாட்டி..

Tags : #MAN #WIFE MEMORIES #SAFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man kept his wife memories safe for 32 years his letter emotional | India News.