"பூமி'ய இப்டி பாத்துருக்கவே மாட்டீங்க.." பிரம்மிப்பில் ஆழ்த்தும் புதிய பரிமாணம்.. 'EUROPEAN' விண்வெளி நிலையம் வெளியிட்ட புகைப்படம்..
முகப்பு > செய்திகள் > உலகம்பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் ஏராளமான ஆய்வு முடிவுகள் நம்மை எப்போதுமே வியப்பில் ஆழ்த்தி வரும்.

Also Read | முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு
அதே போல, விண்வெளி தொடர்பாகவும் ஏராளமான ஆராய்ச்சிகளை நாசா உள்ளிட்ட ஏராளமான விண்வெளி நிலையங்களின் ஆய்வாளர்கள் தொடர்ந்து நடத்தி, பல்வேறு புது தகவல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்துவார்கள்.
சமீபத்தில் கூட, நாசா விண்வெளி நிலையம், தங்களுடைய டெலஸ்கோப்களை கொண்டு விண்வெளியின் பல்வேறு பரிணாமங்கள் தொடர்பாக புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு இருந்தது. இதன் மூலம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த கேலக்ஸி தொடர்பாக இவர்கள் வெளியிட்டிருந்த புகைப்படம், உலக மக்கள் அனைவரையும் கடும் பிரம்மிப்பில் கூட ஆழ்த்தி இருந்தது.
இது தொடர்பாக தொடர்ந்து நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி இருந்த பரிணாமங்கள் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக ஐரோப்பியன் விண்வெளி நிலையமான ESA வெளியிட்டுள்ள புகைப்படங்கள், மக்களை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் கேப்ஷனில், "பூமியை நீங்கள் இப்படி பார்த்திருக்கவே மாட்டீர்கள்" என்று குறிப்பிட்டு சில அரிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அவர்கள் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, இத்தாலி மற்றும் கிரீஸ் நாடுகளை சேர்ந்த சில இடங்களின் நிலத்தடி தொடர்பான புகைப்படங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது. பல இடங்களிலும் நிலச்சரிவு, பூமிக்கு அடியில் நீர் வரத்து காரணமாக, கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆபத்துக்கு உள்ளாவது என நிலத்தடியை கொண்டு, நிறைய இயற்கை பேரிடர்களை அவ்வப்போது நடைபெறுகிறது.
இது தொடர்பான விஷயங்களை முன்பே கணிப்பதற்காகவும், நிலத்தின் மதிப்பு எப்படி என்பதை கணிக்கவும் தான் ஐரோப்பியன் விண்வெளி நிலையம், இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பூமியின் பல பகுதிகளிலும், விண்வெளியில் நடைபெற்று வரும் ஆய்வுகள் தொடர்பான புகைப்படங்களை நிறைய கண்டுள்ள நிலையில், பூமிக்கு அடியே உள்ளது தொடர்பான புகைப்படங்களை தற்போது ஐரோப்பியன் விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் உறைந்து போக வைத்துள்ளது.
Also Read | "பைக் சாவி'ய குடு".. கேட்ட தந்தை.. மறுத்த மகன்.. கொஞ்ச நேரத்தில் நடந்த பதற வைக்கும் சம்பவம்

மற்ற செய்திகள்
