"இன்னைக்கும் நாளைக்கும் வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க".. நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றும் நாளையும் பெர்சீட்ஸ் விண்கல் மழை உச்சத்தை அடையும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | உலகின் மிகவும் காரமான மிளகாய்.. மனுஷன் அதேயே அசால்ட் செஞ்சிருக்காரே.. கின்னஸ் அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க.. !
விண்கல் மழை
விண்வெளி எப்போதும் பல ஆச்சர்யங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. சூரிய குடும்பத்தில் கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றி வருகின்றன. குறிப்பிட்ட சில காலங்களில் விண்வெளி தூசுக்கள் நிரம்பிய பகுதிகள் வழியே பூமி சில நாட்கள் பயணிக்கும். அப்போது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள் காற்றின் அடர்த்தி காரணமாக தீப்பிடிக்கும். இவை இரவு வானில் வெளிச்ச கோடாக தெரியும். இதுவே விண்கல் மழை எனப்படுகிறது. பொதுவாக ஆகஸ்டு மாதத்தில் வானத்தில் விண்கல் மழையை நாம் ரசிக்கலாம். அந்த வகையில் பெர்சீட்ஸ் எனப்படும் விண்கல் மழை மிகவும் புகழ்பெற்றது.
கடந்த ஜுலை 17 ஆம் தேதி துவங்கிய இந்த விண்கல் மழை இன்றும் நாளையும் உச்சத்தை அடையும் என அறிவித்திருக்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருப்பினும், ஆகஸ்டு 24 ஆம் தேதிவரையில் இந்த விண்கல் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விண்கல் மழை உச்சம் அடையும் போது, ஒரு மணிநேரத்துக்கு 150 - 200 வரையிலான விண்கல்லை பார்க்கலாம்.
நிலவு வெளிச்சம்
இருப்பினும், இந்த ஆண்டு நிலவின் வெளிச்சம் அதிகமாக இருப்பதால் மக்களால் விண்கல் மழையை பார்ப்பதில் சிரமம் ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஆராய்ச்சியாளர் பில் குக்,"நிலவின் அதீத வெளிச்சம் காரணமாக வழக்கமாக விண்கல் மழையின் போது நாம் பார்க்கும் அளவை விட குறைவான அளவிலேயே விண்கல் மழையை காண முடியும். இந்த முறை 10 - 20 விண்கல் வரை நம்மால் பார்க்க முடியும்" என்றார்.
வழக்கமாக வட அரைக்கோளத்தில் இருப்பவர்கள் விடியலுக்கு முன்னர் விண்கல் மழையை அதிக அளவில் பார்க்க முடியும். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வெளிப்புற வெளிச்சங்கள் இல்லாத துல்லிய வானத்தில் விண்கல் மழையை பார்க்கலாம். இத்தாலியில் அமைந்துள்ள பெல்லாட்ரிக்ஸ் வானியல் ஆய்வுக்கூடம் இந்த ஆண்டும் பெர்சீட்ஸ் விண்கல் மழையை நேரலை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.
Also Read | உள்ளாடைக்குள் இருந்த ரகசிய உள் பாக்கெட்.. ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. பரபரப்பான விமான நிலையம்..!