செவ்வாய் கிரகத்தில்.. நூடுல்ஸ் மாதிரி இருந்த பொருள்??.. குழம்பிய நெட்டிசன்கள்.. கடைசியில் 'நாசா' கொடுத்த விளக்கம்..
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளி தொடர்பாக, உலகில் உள்ள பல விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பலரை பிரமிக்க வைக்கும் முடிவுகளையும் வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் கூட, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம், ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேலக்ஸி தொடர்பான புகைப்படங்களை எடுத்திருந்தது, உலக அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.
அந்த வகையில், சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடைபெற்று வந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ, இணையத்தில் வழியாக கடும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில், அதற்கான விளக்கத்தை நாசா விண்வெளி மையம் தற்போது அளித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ரோவர் ஒன்றை அனுப்பி இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் பல இடங்களில் சுற்றி, பல விதமான போட்டோக்களையும் எடுத்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, இத்தனை நாட்களில் செவ்வாய் கிரகம் தொடர்பாக பல்வேறு அரிய வகையிலான தகவல்களையும் இந்த ரோவர் எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பாக, செவ்வாய் கிரகத்தில் ரோவர் எடுத்த புகைப்படம் ஒன்று, கடும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. பார்ப்பதற்கு நூடுல்ஸ் போலவே இருக்கும் இந்த புகைப்படம், ஒரு மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனைக் கண்ட பலரும், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பொருளை பார்த்து குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், நூடுல்ஸ் போல செவ்வாய் கிரகத்தில் தெரிந்த பொருள் என்ன என்பது பற்றி, விளக்கம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, இந்த ரோவர் ஆரம்பத்தில் செவ்வாய் கிரகத்தில் சென்ற சமயத்தில், அதில் பொருத்தப்பட்ட போர்வையின் ஒரு நூல் வடிவு தான் அது என்பதும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில் செவ்வாய் கிரகத்தில் ஏதோ மர்மமான பொருள் இருப்பதாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது அது நிஜத்தில் என்ன என்பதையும் நாசா விண்வெளி மையமே உறுதி செய்துள்ளது.
Also Read | பல வருசமா நிலப் பகுதியில் நிற்கும் விமானம்.. "ஆனா, அந்த ஒரு விஷயம் தான் இன்னும் மர்மமாவே இருக்கு.."