வெறும் 'ஏவுகணை' சோதனை மட்டும் பண்ணிட்டு இருக்கோம்னு நினைச்சீங்களா...? 'வேலை பயங்கர ஸ்பீடா நடந்திட்டு இருக்கு...' - 'நடுங்க' வைக்கும் 'சாட்டிலைட்' புகைப்படம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபத்தில் வட கொரியாவில் (North Korea) நடந்த இரண்டு ஏவுகணை (missile) சோதனைகள் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது.

இது குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா (America), வட கொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் கடும் அச்சுறுத்தலாக உள்ளது எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா புதன் கிழமையன்று (15-09-2021) கிழக்கு கடற்பகுதியில் இரு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. ஒரே வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆய்வு செய்து வருவதாக அறிக்கை வெளியானது.
இந்நிலையில் தற்போது வடகொரியா தனது அணுசக்தி வளாகத்தின் உள் இருக்கும் யுரேனியம் (uranium) செறிவூட்டல் ஆலையை விரிவாக்கம் செய்யும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாக்ஸர் விண்வெளி நிறுவனம், வட கொரியாவின் யோங்பியோன் அணுசக்தி வளாகத்தில் 10,760 சதுரடி பரப்பளவில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தின் உற்பத்தியை வடகொரியா 25 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிபுனர்கள் கூறியுள்ளனர். அணு ஆயுதங்களைத் தாங்கி தொலை தூரம் சென்று தாக்க கூடிய அதிநவீன ஏவுகணைகளை வட கொரியா சமீபத்தில் சோதனையிட்டது ஜப்பான் மற்றும் தென் கொரியாவை அச்சத்தில் உறைய வைத்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ரயிலில் இருந்து கிளம்பி துல்லியமாக தாக்கும் ஏவுகணை என தொடர்ச்சியாக உலக நாடுகளை மிரட்டி வருகிறது.
2017-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வட கொரியா எந்த அணு ஆயுத சோதனைகளையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்று வட கொரியாவுக்கு ஐநாவின் சர்வதேச அணு சக்தி முகமையும் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், சத்தமில்லாமல், அணு ஆயுத சோதனைகளை, அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரிய அரசு தீவிரமாக நடத்தி வருகிறது.

மற்ற செய்திகள்
