நம்மள நிம்மதியா 'தூங்க' விடக்கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்க...! 'அலறும் அண்டை நாடுகள்...' - இந்த ஏவுகணையோட 'பவர்' பத்தி கேட்டா மயக்கமே வந்திடும்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியா (North Korea) அடிக்கடி ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அமைப்புகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா செயல்படுத்தி வரும் இந்த ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏவுகணை சோதனை காரணமாகவே அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மோதல் நிலவி வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக வடகொரியா தொடர்ந்து நாட்டின் எல்லைகளை மூடிவைத்துள்ளது. அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது. பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியா சமீபத்தில் உணவுப் பஞ்சத்தையும் எதிர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுக்க கொரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான இரு ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை பக்கத்து நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா (Yoshihide Suga) தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று நடத்தப்பட்ட சோதனையில் 800 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.
இந்த மாதிரியான ஏவுகணை சோதனைகள், அணுசக்தி நடவடிக்கைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளை மீறும் செயல் ஆகும்.

மற்ற செய்திகள்
